Pages

Thursday, April 5, 2018

அதிராம்பட்டினத்தில் திமுக~மமக~நாம் மனிதர்~கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் ~ 60 பேர் கைது!

அதிராம்பட்டினம், ஏப்.05
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் தமிழகத்தில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரி கட்சியினர், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே இன்று வியாழக்கிழமை காலை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

திமுக சார்பில்...
திமுக அதிராம்பட்டினம் பேரூர் செயலர் இராம.குணசேகரன் தலைமையில், போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

மனிதநேய மக்கள் கட்சி சார்பில்...
தமுமுக/மமக தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை அகமது ஹாஜா,
தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில், மனிதநேய மக்கள் கட்சியினர் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாம் மனிதர் கட்சி சார்பில்...
நாம் மனிதர் கட்சி தஞ்சை மாவட்டத் தலைவர் சரபுதீன் தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில், நாம் மனிதர் கட்சியினர் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்...
அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் என்.காளிதாஸ் தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சியினர் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

திமுக 15, மனிதநேய மக்கள் கட்சி 15, நாம் மனிதர் கட்சி 15, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 15, உட்பட 60 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...