Pages

Monday, April 9, 2018

அமெரிக்காவில் தாய், மகளுக்கு எழுதிய கடிதம் 60 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிப்பு!

அதிரை நியூஸ்: ஏப்.09
அமெரிக்காவின் தென் கலிபோர்னியா மாகாணத்தின் கோஷென் (Goshen) என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஷரோன் கோங்வெர். இவரது தாய் வட இன்டியானா மாகாணத்திலிருந்து சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் போஸ்ட் கார்டில் (அஞ்சல் அட்டை) எழுதிய கடிதம் யதேச்சையாக கண்டுபிடிக்கப்பட்டு தென் கலிபோர்னியா மாகாணம் கோஷெனில் செயல்படும் குவாலிட்டி இன் & சூட்ஸ் என்ற ஹோட்டலின் மேனேஜரான கிரிஸ்டைன் கோம்ப் என்பவரால் நேரில் கொண்டு சென்று வழங்கப்பட்டது.

கிரிஸ்டைன் கோம்ப் தன்னுடைய ஹோட்டலின் அலமாரிகளை சுத்தம் செய்யும் போது 1958, ஆகஸ்ட் 26 என தேதியிடப்பட்ட இந்த அஞ்சல் அட்டையை மிகவும் நல்ல நிலையில் கண்டுபிடித்தார். அஞ்சல் அட்டையிலிருந்த முகவரியான 'மிஸ் ஷரோன் ஆன் கோங்வெர், வகருஸா' என்ற அருகாமை பகுதியின் முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அந்தப்பெண் அவருடைய ஹோட்டல் அருகேயே செயல்படும் ஒரு முதியோர் இல்லத்தில் தங்கியிருந்ததும் தேடுதலின் போது தெரியவந்தது.

3 சென்ட் ஸ்டாம்ப் ஒட்டப்பட்டிருந்த அந்த அஞ்சலட்டையை பெற்றுக் கொண்ட அந்தப் பெண் என்னுடைய தாயின் நினைவாக ஏதுமில்லாதிருந்த நிலையில் இந்த கடிதம் கிடைத்ததை பெருமிதமாக உணர்வதாக தெரிவித்தார். உங்களுடைய முகத்தில் இன்றைய தினம் புன்னகையை வரவழைத்ததற்காக மகிழ்கிறேன் என கிரிஸ்டைன் கோம்ப் பதிலுக்கு தெரிவித்தார். எனினும் அந்தக் கடிதம் எவ்வாறு உரியவரிடம் டெலிவரி செய்யப்படாமல் ஹோட்டலில் முடங்கியது எனத் தெரியவில்லையாம்.

Source: AP / Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...