Pages

Monday, April 2, 2018

87வது வயதில் பிரிட்டன் சமூக சேவகிக்கு பங்களாதேஷ் குடியுரிமை வழங்கி கவுரவிப்பு!

அதிரை நியூஸ்: ஏப்.02
இந்த கதை நமக்கெதுக்கு என்பவர்களுக்கு அல்ல இப்பதிவு, உரிய உழைப்பிற்குப் பின் அங்கீகாரம் தேடிவாடும் உள்ளங்களுக்கான ஒத்தடம் இது!

பங்களாதேஷ் நாட்டில் தங்கியிருந்து சுமார் 50 ஆண்டுகளாக பல வகையான சமூக சேவைகளில் ஈடுபட்டு வருபவர் 87 வயது லூசி ஹோல்ட். இவர் தனது 30வது வயதில் 1960 ஆம் ஆண்டு 'பாரிஸால்' எனும் நகரில் உள்ள ஆக்ஸ்போர்டு மிஷன் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக இணைந்தார், எப்படியாவது 2 வருடத்திற்குள் நாடு திரும்பிவிட வேண்டும் என்கிற வளைகுடாவாசிகளின் அதே நம்பிக்கையுடன் தான் ஆனால் இன்று வரை ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி, மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அரவணைத்தல் என பங்களாதேஷ் முழுவதும் தனது சமூக சேவைகளை விரிவாக்கி ஆலமரமாக நிலைத்துள்ளார்.

1971 ஆம் ஆண்டு இந்தியா உதவியுடன் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற விடுதலைப்போரின் போது ஜெஸ்ஸோர் மாவட்டத்திலுள்ள பாத்திமா மருத்துவமனையில் வைத்து காயம்பட்ட பொதுமக்களுக்கும், வீரர்களுக்கும் அரும் பல உதவிகள் புரிந்தார். அதேபோல் தன்னுடைய பெற்றோர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் பங்களாதேஷிற்கு ஆதரவான கடிதங்களை எழுதி கருத்துக்களை பொதுவெளியில் பரவச்செய்து மேற்குலக நாடுகள் பங்களாதேஷிற்கு சாதகமான முடிவுகளை எடுக்க தன் சக்திக்குட்பட்டு முயன்றார்.

இதுபோல் எண்ணற்ற பல சேவைகளின் மூலம் தன்னையே பங்களாதேஷிற்காக அர்ப்பணித்துக் கொண்ட இந்தப்பெண் பலமுறை குடியுரிமைக்கு விண்ணப்பித்தும் கிடைக்காததால் ஒவ்வொரு முறையும் விசாவை புதுப்பிக்க தேவையான பணம் இல்லாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதையும் அறிந்த பத்திரிக்கையாளர் ஒருவர் இவரது சேவைகள் குறித்து ஆவணப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்தே லூசி ஹோல்ட் குறித்து அறிந்த அரசு அவருக்கு பங்களாதேஷ் குடியுரிமை வழங்கி பாராட்டியுள்ளதுடன் அவருடைய தேவைகள் அனைத்திற்கும் பங்களாதேஷ் அரசே பொறுப்பெடுத்துக் கொள்ளும் எனவும் அறிவித்துள்ளனர்.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...