Pages

Thursday, April 12, 2018

காதிர் முகைதீன் கல்லூரியில் ஆங்கில இலக்கிய மன்ற ஆண்டு விழா (படங்கள்)

அதிராம்பட்டினம்  ஏப்.12
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் ஆங்கில இலக்கிய மன்ற ஆண்டு விழா நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். பேராசிரியர் எம். சிக்கந்தர் பாதுஷா, பேராசிரியைகள் திருமதி எம். ஏ தஸ்லீமா, இ. பிளோமினா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக பூம்புகார் கல்லூரி ஆங்கிலத்துறைத் பேராசிரியர் டாக்டர் பி.அசோக் குமார் கலந்துகொண்டு விழா பேரூரை ஆற்றினார். விழாவில், ஆங்கில இலக்கியப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, கல்லூரி உதவிப் பேராசிரியர் ஜி.ஆர் நாகராஜன் வரவேற்றுப் பேசினார். உதவிப் பேராசிரியர் ஐ. முகமது நாசர் ஆண்டறிக்கை வாசித்தார். நிகழ்ச்சிகளை உதவிப் பேராசிரியர் கே. பார்த்திபன் தொகுத்து வழங்கினார். முடிவில், உதவிப் பேராசிரியர் பி. பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

இவ்விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...