Pages

Saturday, April 14, 2018

தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு நாள் அனுசரிப்பு!

பேராவூரணி ஏப்.15-
பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையத்தில் தீ தொண்டு நாள் வாரத்தையொட்டி பணியின் போது உயிர் நீத்த வீரர்களின் நினைவாக ஏப்-14 சனிக்கிழமை அன்று  மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

கடந்த 1944 ம் ஆண்டு மும்பை கடலில் கப்பலில்  தீப்பிடித்து எரிந்த தீயை அணைப்பதற்கான பணியில் ஈடுபட்டிருந்த 231 தீயணைப்பு வீரர்கள் தீயில் சிக்கி உயிர் நீத்தனர். அதே போல் 1955 ஆம் ஆண்டு முதல் 2018 ஆண்டு வரை தமிழகத்தில் ஏராளமான  தீயணைப்பு வீரர்கள் பணியின் போது தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.  பணியின் போது உயிரிழந்த வீரர்களின் நினைவாக ஏப் 14 முதல் 20 வரை தமிழ்நாடு தீயணைப்பு- மீட்பு பணி நிலையங்களில் தீயணைப்பு தொண்டு நாளாக அனுசரிக்கப்படுகிறது.

சனிக்கிழமை அன்று பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையத்தில் நிலைய அலுவலர் எஸ்.தெட்சிணாமூர்த்தி தலைமையில், நிலைய அலுவலர் (போக்குவரத்து) என்.ரவிச்சந்திரன், முன்னணி தீயணைப்போர் இரா.செல்வராஜ் மற்றும் தீயணைப்பு பணியாளர்கள் நீலகண்டன், ரஜினி, சீனிவாசன், சுப்பையன், விமலானந்தன், மணிவேல், சுந்தர்ராஜ் உள்ளிட்டோர் அணிவகுப்பு மரியாதையோடு, மறைந்த வீரர்களின் நினைவு சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...