Pages

Wednesday, April 11, 2018

துபை விமான நிலையங்களில் கைகள் மூலம் கையாளப்படும் பேக்கேஜ் மீது கூடுதல் கட்டணம் விதிப்பு!

அதிரை நியூஸ்: ஏப்.11
துபை விமான நிலையங்களில் கைகள் மூலம் கையாளப்படும் பேக்கேஜ்கள் மீது கூடுதல் கட்டணம் விதிப்பு

துபை விமான நிலையங்களில் இருந்து பயணிக்கும் பயணிகளுக்கு பேக்கேஜ் அளவைகள் குறித்து ஏற்கனவே கட்டுப்பாடுகள் உள்ளன எனினும் சில பேக்கேஜ் அளவில் பெரிதாக, எடையில் கூடியதாக, எடை மிக மிக குறைந்ததாக, குறைந்தபட்சம் ஏதாவது ஒருபுறமாவாது தட்டையான அடிப்பாகம் இல்லாததாக, உடையக்கூடிய பொருட்களை உடையதாக, சேதம் விளைவிக்கக்கூடியதாக, கையாள்வதில் மிகுந்த நேரம் எடுக்கும் பேக்கேஜ்களாக இருந்தால் அதாவது மேனுவலாக கையாளப்படும் அனைத்து பேக்கேஜ்களின் மீதும் சேவை வழங்கும் ஏர்லைன்ஸ்கள் மற்றும் தடங்களுக்கு ஏற்றவாறு கூடுதல், குறைவாக எக்ஸ்ட்ரா கட்டணம் வசூலிக்கப்படும் என டனட்டா (Dnata) நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Aviation sources said “out of gauge (OOG)” baggage are too large, too light, too heavy, too fragile, or not having a flat surface. These include TVs, flat panel displays and baggage that can damage or slow down the baggage system.

“This is different from the excess baggage fee charged for carrying baggage above the allowance per tickets’ class,” said one source.

இதுபோல் ஒழுங்கற்ற, மேனுவலாக கையாளப்படும் பேக்கேஜ்களின் (Manual Handled Baggage's) ஒவ்வொன்றின் மீதும் 45 திர்ஹம் வசூலிக்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் மட்டுமே தற்போது வரை வெளிப்படையாக அறிவித்துள்ளது. பிற ஏர்லைன்ஸ்கள் டனாட்டாவுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தத்தை தொடர்ந்து அவை தனித்தனியாக அறிவிக்கும். மேலும் விபரங்களுக்கு அந்தந்த ஏர்லைன்ஸூகளின் இணையதளத்தை பார்த்துக் கொள்ளவும்.

துபை விமான நிலையங்களில் பேக்கேஜ்களின் அனுமதிக்கப்பட்ட அளவு 30X30X7.5 செ.மீ,  குறைந்த எடை என்பது ஆகக்குறைந்தபட்சம் 2 கிலோவாக இருக்க வேண்டும். 43 மேற்பட்ட அளவுடைய டிவி, கூட்டுமாறு கட்டைகள், கம்பளியால் சுத்தி கொண்டு வரப்படும் பேக்கேஜ்கள் போன்றவையும் இந்த கூடுதல் கட்டண திட்டத்தில் அடங்கும்.  லக்கேஜின் எந்த பக்கமாவது 75 செ.மீ.அளவுக்கு மேலிருந்தாலும் கட்டணம் உண்டு.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...