Pages

Thursday, April 12, 2018

மோடியே திரும்பி போ... நூதனப் போராட்டம் (படங்கள்)

பேராவூரணி ஏப்.12
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தியும், தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்தும், எதிர்க்கட்சிகள் சார்பில் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில்  கருப்பு சட்டை, கருப்பு பட்டை அணிந்தும், கருப்பு கொடி ஏந்தியும், கடைகள், வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து பொதுமக்கள், அரசியல் கட்சியினர், விவசாய, விவசாய தொழிலாளர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், மாதர்சங்க, மாணவர் சங்க, வாலிபர் சங்க அமைப்புகள் வியாழன் அன்று போராடினர். பேராவூரணியில் கடைவீதி, பெரியார் சிலை, அண்ணாசிலை, பேருந்து நிலையம் ஆகிய  பகுதிகளில் கருப்பு கொடிகள் கட்டப்பட்டிருந்தது.

தமிழக மக்கள் விடுதலை இயக்கத்தின் அரசியல் செயலாளரான பேராவூரணியை அடுத்த ரெட்டவயல் பகுதியை சேர்ந்த முனைவர் ஜீவானந்தம், 'மோடியே திரும்பி செல்', 'காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு' என எழுதப்பட்ட, கருப்பு குடையுடன், பேருந்து நிலையம் அம்பேத்கர் சிலையில் இருந்து, சுமார் 2 கிமீ தூரம் பின்னோக்கி நடந்தவாறு தபால்நிலையம் வரை சென்றார். அங்கு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினார்.

அவருடைய போராட்டத்தை ஆதரித்து மெய்ச்சுடர் வெங்கடேசன், தா.கலைச்செல்வன், எழுத்தாளர் பாக்கி.உமாநாத், பெரியார் அம்பேத்கர் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனல்.ச.ரவீந்திரன், முருகானந்தன் ஆகியோர் பேசினர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...