Pages

Friday, April 13, 2018

குடியிருப்பு பகுதியில் மழை நீருடன் கழிவுநீர் புகுந்தது ~ வடிகாலை சீரமைக்க கோரிக்கை (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.13
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் பெய்த மழையால் புதுத்தெரு தென்புறம் பகுதியில் உள்ள குடியிருப்பு சாலைகளில் புகுந்துள்ள கழிவு நீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். காங்கிரட் மூடியுடன் கூடிய வடிகால் அமைத்து தர கோரிக்கை.

அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட புதுத்தெரு தென்புறம் பகுதியில் அமைந்துள்ள வடிகால் வழியாக அதிராம்பட்டினத்தின் பிற பகுதிகளின் குடியிருப்பு கழிவு நீர் கடந்து செல்கிறது. பல ஆண்டுகளாக தூர் வாரப்படாததால் வடிகாலில் கழிவு நீர் சீராகச் செல்லாமல் ஆங்காங்கே தேங்கிக் காணப்படும்.

இந்நிலையில், அதிராம்பட்டினம் பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த மழையின் காரணமாக, மழை நீருடன் கழிவு நீர் கலந்து புதுத்தெரு தென்புற பகுதியில் உள்ள சாலைகளில் புகுந்து ஆங்காங்கே தேங்கிக் காணப்படுகிறது. இதனால், துர்நாற்றம் வீசி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தூர்ந்து போன கழிவு நீர் வடிகாலை சீரமைத்து, மழையின் போது கழிவு நீர் குடியிருப்பு பகுதிகளில் புகாதவாறு காங்கிரட் மூடியுடன் கூடிய வடிகால் வசதி அமைத்து தர இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...