Pages

Saturday, April 14, 2018

தஞ்சையில் சமூக நீதி நாள் பேரணி (படங்கள்)

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் முன்னிலையிலும், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் கிராம சுயாட்சி இயக்கம் சமூக நீதி நாள் கொண்டாடும் நிகழ்ச்சி பேரணியை வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு இன்று (14.04.2018) சனிக்கிழமை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். பொது மக்கள் முன்னிலையில் மத நல்லிணக்க உறுதிமொழியை வேளாண்மைத்துறை அமைச்சர் வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் சட்ட பட்டதாரிகள் தொழில் துவங்க 5 சட்ட பட்டதாரி பயனாளிகளுக்கு தலா ரூ.50,000 வீதம் முழு மானியமாக ரூ.2,50,000 காசோலையாகவும், டாக்டர் எம்.ஜி.ஆர்.சத்துணவு துறையில் 2 நபர்களுக்கு சத்துணவு மைய அமைப்பாளர் பணியிடமும், சத்துணவு மைய சமையலர் பணியிடமும், கருணை அடிப்படையில் வேலை நியமன ஆணை வழங்கப்பட்டது.  வருவாய்த்துறையின் மூலம் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 6 முதியோர்களுக்கு மாதாமாதம் ரூ.1000 பெறுவதற்கான ஆணையும், 2 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டு மனைப்பட்டாவும், சாதிச்சான்று, இருப்பிடச் சான்று, வருமானச் சான்று என 4 பயனாளிகளுக்கும், வீட்டுமனைப்பட்டா 5 பயனாளிகளுக்கும் வழங்கி மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் கிராம சுயாட்சி இயக்கம் சமூக நீதி நாள் கொண்டாடும் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.  இப்பேரணியானது பழைய பேருந்து நிலையத்திலிருந்து அரசு மிராசுதார் மருத்துவமனை வழியாக திலகர் திடல், சிவகங்கை பூங்கா, தெற்கு வீதி வழியாக அரண்மனை வளாகத்தில் பேரணி நிறைவடைந்தது.

இப்பேரணியில் பள்ளி மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள், அரசு அலுவலர்கள் என 1500 க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார்,  மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் துரை.திருஞானம், ஒருங்கிணைந்த பால்வள கூட்டுறவு சங்கத் தலைவர் காந்தி, முன்னாள் மாநகராட்சி மேயர் சாவித்திரிகோபால், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் அமுதாராணி ரவிச்சந்திரன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் எஸ்.மோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு (பட்டுக்கோட்டை), ஊராட்சிகள் உதவி இயக்குநர் முருகேசன், தாட்கோ பொது மேலாளர் தியாகராஜன், சமூக பாதூகப்புத்துறை தனி துணை ஆட்சியர் ரவிச்சந்திர, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் மதியழகன், மாநகராட்சி ஆணையர் காளிமுத்து, பிற்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் நல அலுவலர் (பொ) மணி, பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜ், மகளிர் திட்ட அலுவலர் இந்துபாலா, வட்டாட்சியர் தங்கபிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...