Pages

Tuesday, April 3, 2018

சவுதியில் கடும் வேதனைகளை மட்டுமே சந்தித்த நிலையிலும் தானத்தால் உயர்ந்த நேபாளி பணிப்பெண்!

அதிரை நியூஸ்: ஏப்.03
சவுதியில் கடும் வேதனைகளை மட்டுமே சந்தித்த நிலையிலும் தானத்தால் உயர்ந்த நேபாளி பணிப்பெண்

ஜித்தாவிலுள்ள நேபாள தூதரகத்திற்கு பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வேண்டி ஒரு நேபாளப் பெண்மணியை அழைத்து வருகிறார் ஒரு சவுதியர். அங்கிருந்த நேபாள அலுவலர் ஏன் கடந்த 10 ஆண்டுகளாக நாட்டிற்கே செல்லவில்லை என அப்பெண்ணை கேட்க அங்கே பெரும் சோகமும், அவருடைய உயர்ந்த உள்ளமும் ஒருசேர வெளிப்படுகின்றது.

நேபாள தூதரகம் உடனடியாக அப்போதே களமிறங்கி அப்பெண்ணை சவுதியரிடமிருந்து மீட்டதுடன், அவரை பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைத்தும் அவருடைய சம்பளத்தை சவுதி அதிகாரிகளின் உதவியுடன் வாங்கிக் கொடுத்தும், நாளை புதன்கிழமையன்று நாட்டுக்கு பத்திரமாக திருப்பினுப்பும் நடவடிக்கைகளிலும் இறங்கி தீவிரமாக செயலாற்றி வருகின்றனர். இமயத்தை விட உள்ளத்தால் உயர்ந்த அந்த இமாலய நாட்டு பெண்மணியின் துயரத்தை விரிவாக பார்ப்போம், நேர்வழிக்காக பிரார்த்திப்போம்.

சவுதி அரேபியாவின் தாயிப் நகரின் ஒரு சவுதியர் வீட்டில் பணிப்பெண்ணாக கடந்த 2008 ஆம் ஆண்டு பணியமர்த்தப்படுகிறார் நேபாளத்தை சேர்ந்த கங்கமாயா குமால் (தற்போது வயது 45) என்ற பெண்மணி. அதன்பின் அவர் கடந்த பத்தாண்டுகளாக நாடு திரும்பவோ, குடும்பத்தினருடனும், வெளியுலகத்துடனும் தொடர்பு கொள்ளவோ அனுமதிக்கப்படவே இல்லை.

அவருடைய மாதச்சம்பளம் 500 ரியால்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது ஆனால் சத்தியமாக ஒரு ரியாலை கூட இன்னாள் வரை அவர் தொட்டுப் பார்த்ததில்லை என்பதோடு சவுதி பணம் எப்படி இருக்கும் என்பதை கூட கண்ணால் பார்த்ததில்லை எனத் தெரிவிக்கின்றார் இப்பேதை.

அப்பெண்ணுடைய உறவினர்கள் தொலைபேசி வழி அழைத்தாலும் சவுதியர் போனை எடுக்கவே மாட்டாராம். இதற்கிடையில் அவருடைய தந்தையும், கணவரும் நோய்வாய்ப்பட்டு இறந்தும் விட்டனர், இருவரின் இறுதிச்சடங்கிற்கு செல்லக்கூட அனுமதிக்கவில்லை. குடும்பத்தினரோடு மட்டும் பேசப் பயன்பட்டுக் கொண்டிருந்த மொபைல் போனும் இடையில் பிடுங்கப்பட்டுவிட்டது. கடந்த 10 ஆண்டுகளில் ஒருநாள் கூட விடுமுறை எடுத்ததும் இல்லையாம். அவருடைய மண் குடிசையும் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட நேபாள பூகம்பத்தில் அழிந்துள்ளது.

இதற்கிடையில் அவருடைய சம்பளம் 500 ரியாலை மாதமாதம் சவுதி முதலாளியே அவருடைய வீட்டிற்கு அனுப்பி வருவதாக தெரிவித்துள்ளார், இவ்வாறாக 3 வருடங்கள் 4 மாதங்களுக்கு மட்டுமே அனுப்பியதாக சொல்லியுள்ளார். ஆகா, மீதமுள்ள 6 வருடங்கள் 8 மாதங்களுக்கான சம்பளத்தையும் ஆட்டையை போட்டுள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். பணம் அனுப்பியதாக சொல்வதில் எவ்வளவு உண்மை, எவ்வளவு பொய் கலந்துள்ளது என்ற ஆராய்ச்சிகளுக்கெல்லாம் செல்லாமல் அப்பெண் சொன்னதை ஒப்புக் கொண்டார்.

இடையில் இப்பெண் தேவையுடைய சில தாயிப்வாசிகளுக்கு தான் தன் கைகளால் சிறிது தானம் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ள நியாயமான ஆசையும் சவுதியரால் மறுக்கப்பட்டு அவருடைய சம்பளத்திலிருந்து 2 மாத சம்பளமான 1,000 ரியாலை அவர் சார்பாக தானம் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார் அந்த சவுதி நபர்.

ஒருவழியாக நேபாள தூதரகத்தின் முயற்சியாலும், சவுதி அதிகாரிகளின் ஒத்துழைப்பாலும் அந்த சவுதியர் ஒப்புக் கொண்ட 6 ஆண்டுகள் 8 மாதங்களுக்கான சம்பளமும், அவருடைய பணிமூப்பு சம்பளமும் (End of service benefits), 10 ஆண்டுகளாக வெள்ளிக்கிழமை விடுமுறை நாட்களிலும் செய்த வேலைகளுக்காக கூடுதல் 500 ரியாலும் தரப்பட்டுள்ளார். அப்பெண் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட போது எடுத்துக் கொண்ட மருத்துவ சிகிச்சைகளுக்கான செலவுகளையும் பிடித்தம் செய்துள்ளார் அந்த ஈவிரக்கமற்ற சவுதி நபர்.

எத்தகைய மேல் முறையீட்டை செய்ய விரும்பாமலும், குற்ற வழக்கு தொடுக்க விரும்பாமலும் கொடுத்த சம்பள பாக்கியை மட்டும் பெற்றுக் கொண்ட அந்த பெண்மணி, தன்னுடைய முதலாளி தன் சார்பாக தர்மம் செய்ததாக சொன்ன 1,000 ரியாலையும் வாங்க மறுத்துவிட்டார் அந்த 'உன்னத கோடீஸ்வரி' இந்த ஏழையின் இரக்கத்திற்கு ஈடுண்ட சொல்லுங்கள்!

அடப்பாவிகளா, நீங்கள் ஒரு சராசரி முஸ்லீமாக வாழ்ந்திருந்தால் கூட நற்குணம் நிறைந்த இப்பெண்ணிற்கு நேர்வழி கிடைத்துருக்குமே! உங்களுடைய தீய குணம் தூய இஸ்லாத்தின் மீதள்ளவா அப்பெண்ணிற்கு வெறுப்பை ஏற்படுத்தியிருக்கும்.

ஒருவேளை நான் நேபாள தூதரகத்திற்கு வராமல் போயிருந்தால் என்னுடைய வாழ்வு முழுமையும் தாயிபிலேயே முடிந்திருக்கும் என நெகிழும் இவர் மனம் முழுவதும் தாய் மண்ணை காணும் ஏக்கமே நிறைந்துள்ளது. நாளை (புதன்) நாடு திரும்பவுள்ள கங்கமாயா குமால் அவர்கள், நாடு திரும்பிய பின் முதலில் தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்து தர வேண்டும், பூகம்பத்தால் அழிந்த வீட்டை சரிசெய்ய வேண்டும் என தெரிவித்தார்.

சகோதரர்களே! இப்பெண்ணிற்கு நேர்வழி கிடைக்கப்பெற்று, இவர் ஒரு முன்மாதிரி முஸ்லீமாக வாழ்ந்து தீயநடத்தையுள்ள பிற பரம்பரை முஸ்லீம்களுக்கு புத்திபடித்து தர வேண்டும் என ஏக இறைவனிடம் இறைஞ்சுங்கள். அதேபோல் அந்த சவுதி நபரும் திருந்தி இவருக்குரிய நியாயத்தை வழங்க முன்வர வேண்டும் அல்லது ஈருலகிலும் வருந்த வேண்டும் என பிரார்த்திக்க மறவாதீர்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...