Pages

Thursday, April 5, 2018

துபை அல் கைல் குடியிருப்பு பகுதியில் இனி கார் பார்க்கிங் கட்டணம்!

அதிரை நியூஸ்: ஏப்.05
துபை அல் கைல் குடியிருப்பு பகுதியில் இனி கார் பார்க்கிங் கட்டணம் செலுத்த வேண்டும்.

துபை, அல் கோஸ் பிராந்தியத்தில் உள்ள அல் கைல் கேட் (Al Khail Gate Residential Community) குடியிருப்புப் பகுதிகளில் சுமார் 9,000 அப்பார்ட்மெண்ட் குடியிருப்புக்கள் உள்ளன. இங்குள்ள 2 (Ohase) கட்டப்பகுதிகளும் தனி நிர்வாகத்தின் கீழ் நிர்வகிக்கப்படுவதால் இதுவரை பார்க்கிங் கட்டணங்கள் வசூலிக்கப்படவில்லை. எனவே, இப்பகுதியிலுள்ள பார்க்கிங் ஸ்லாட்கள் தினமும் விரைவாகவே நிறைந்து விடுவதால் இங்கு தங்கியிருக்கும் வாடகைதாரர்களுக்கு (Tenants) தினமும் பார்க்கிங் ஸ்லாட்கள் கிடைப்பதில் பெரும் சிரமம் நிலவி வந்தது, இதனால் விதிகளை மீறி பார்க்கிங் செய்ய அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு அதற்கும் அபராதம் கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர் குடியிருப்புவாசிகள்.

இந்நிலையை சமாளிப்பதற்காக அல் கைல் கேட் குடியிருப்பு பகுதி நிர்வாகம் துபை போக்குவரத்து துறையுடன் (RTA) ஓப்பந்தம் செய்து கொண்டு, அங்குள்ள பார்க்கிங் ஸ்லாட்டுகளுக்கு கட்டணம் வசூலித்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் குடியிருப்புவாசிகள் அல்லாதவர்கள் இங்கு பார்க்கிங் ஸ்லாட்டுகளை ஆக்கிரமிப்பு செய்வதிலிருந்து தடுக்கப்படும் என விளக்கமளித்துள்ளது. எனவே, அல் கைல் கேட் 2 கட்ட (2 Phase Apartments) அப்பார்ட்மெண்ட் பகுதியிலும் 24x7 என்ற அடிப்படையில் மணிக்கு 4 திர்ஹம் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. 24 மணிநேரத்திற்கு தினமும் 32 திர்ஹம் செலுத்த வேண்டும்.

அதேபோல் சம்பந்தப்பட்ட காருக்குள்ள அனுமதி காலக்கெடுவை பொருத்து சீஸன் பார்க்கிங் டிக்கெட்டுகளும் வழங்கப்படும்.  Seasonal parking permits will be provided to residents at different rates, depending on the validity of the permit.

சீஸன் பார்க்கிங் டிக்கெட்,
1 வருடத்திற்கு : 2,000 திர்ஹம்
6 மாதத்திற்கு : 1,500 திர்ஹம்
3 மாதத்திற்கு : 1,000 திர்ஹம் என வரையறை செய்யப்பட்டுள்ளது. இந்த பார்க்கிங் ஸ்லாட்டுகள் குடியிருப்புவாசிகளுக்கு மட்டும் எனவும், விசிட்டர்களுக்கு எனவும் பிரிக்கப்படவுள்ளன.

இதுகுறித்து அங்குள்ள குடியிருப்புவாசிகள் கருத்து தெரிவித்துள்ளதாவது; 
இப்படி ஒரேயடியாக பார்க்கிங் கட்டணங்களை விதிக்காமல் அப்பார்ட்மெண்டிற்கு ஒரு இலவச பார்க்கிங் ஸ்லாட் என ஒதுக்க வேண்டும். அதேபோல் சீஸன் பார்க்கிங் டிக்கெட்டுகளையும் அப்பார்ட்மெண்டிற்கு 1 என்றே ஒதுக்க வேண்டும். ஏனெனில் இங்குள்ள சில அப்பார்ட்மெண்ட்டுகளில் பெட் ஸ்பேஸ் அடிப்படையில் கூட்டமாக தங்கியுள்ள பேச்சுலர்கள் அனைவரிடமும் கார்கள் இருக்கின்றன. இவர்கள் அனைவருக்கும் சீஸன் டிக்கெட் வழங்குவதால் ஏற்கனவே உள்ள பார்க்கிங் பிரச்சனை தீரப்போவதில்லை என தெரிவித்தனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...