Pages

Saturday, April 7, 2018

அமீரகத்தில் அட்னாக் பெட்ரோல் பங்குகளில் 'செல்ஃப் சர்வீஸ் ~ பிரீமியம் சர்வீஸ் அறிமுகம்!

அதிரை நியூஸ்: ஏப்.07
அமீரகத்தின் அட்னாக் பெட்ரோல் பங்குகளில் ஏப்ரல் மத்தி முதல் 2 வகையான சேவைகள்

அபுதாபி எமிரேட்டுக்கு சொந்தமான அட்னாக் பெட்ரோல் பங்குகளில் (Adnoc Distributions) இதுவரை பணியாளர்கள் மூலமே வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் சேவைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நடைமுறையில் நடப்பு ஏப்ரல் மாத மத்தி முதல் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

இந்த புதிய மாற்றங்களின்படி வாகன ஓட்டிகள் தாங்களாகவே காரிலிருந்து இறங்கி 'செல்ஃப் சர்வீஸ்' (Self fuel filling service) முறையில் பெட்ரோலை வழமையான கட்டணத்தில் நிரப்பிக் கொள்ளலாம் அல்லது பணியாளர்கள் மூலம் தற்போதைய நடைமுறைப்படி நிரப்பிக் கொள்ளும் பிரீமியம் சர்வீஸ்களுக்கு (Premium service) பெட்ரோல் கட்டணத்துடன் சிறியளவில் சேவைக்கட்டணமும் சேர்த்து செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இருவகை சேவை அறிமுகம் குறித்து பல்வேறு மாற்றுக் கருத்துக்களும் வெளிவந்துள்ளன. பெரிய பதவிகள் மற்றும் அதிக ஊதியங்கள் பெறுவோர் கட்டணம் செலுத்தும் பிரீமியம் சர்வீஸை வரவேற்றுள்ளனர். வேறு சிலரோ எதிர்வரும் வெயில் காலத்தில் காரிலிருந்து இறங்கி பெட்ரோலை நிரப்பிக் கொள்வது மிகவும் சிரமமான காரியம் என தெரிவித்துள்ளனர்.

இன்னொருபுறம் பெண்களுக்கு மட்டுமாவது கூடுதல் சர்வீஸ் கட்டணமில்லாத சேவையை தொடர்ந்து வழங்க வேண்டும். மேலும் அமீரகத்தின் கலாச்சாரத்தின்படி பெண்கள் தங்களை பிற ஆண்கள் முன்னால் வெளிக்காட்ட விரும்ப மாட்டார்கள் என்பதாலும், இன்னும் சிலர் பெண்களுக்கு என்று தனி 'பெண்கள் மட்டும்' லேன்களை உருவாக்கித் தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...