Pages

Tuesday, April 10, 2018

தஞ்சை, பட்டுக்கோட்டையில் கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் ~ மாணவ,மாணவிகள் பங்கேற்க அழைப்பு!

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு
கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு;
2018-ம்  ஆண்டிற்கான கோடைக்கால விளையாட்டுப் பயிற்சி முகாம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவு சார்பாக வருகின்ற  25.04.2018  முதல்  15.05.2018  முடிய  அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் காலை 6.30 மணி முதல் 8.30 மணி  முடியவும், மாலை 4.00 மணி முதல் 6.00 மணி முடிய  21  நாட்களுக்கு  தடகளம், வாலிபால், கூடைப்பந்து, கால்பந்து (மாணவர்களுக்கு மட்டும்) மற்றும் ஹாக்கி ஆகிய விளையாட்டுகளில் சிறப்பாக நடத்தப்பட உள்ளது.

இக்கோடைக்கால விளையாட்டுப் பயிற்சி முகாம் பயிற்றுநர்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட உடற்கல்வி இயக்குநர் / உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி முகாமில்  தஞ்சாவூர் மாவட்டத்தினை சேர்ந்த 16 வயதிற்குட்டப்பட்ட பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் கலந்துக்கொள்ளலாம். மேலும், பாரதியார் தின / குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளிலும், உடற்திறனாய்வு தேர்வு திட்டத்தின் முலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ  /  மாணவியர்களும் இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ளலாம்.

மேலும், பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள சிறு விளையாட்டரங்கத்திலும் (mini stadium) கோடைகால பயிற்சி முகாம் தடகளம், கால்பந்து, வாலிபால் ஆகிய விளையாட்டுக்களில் வருகின்ற 25.04.2018 முதல் 09.05.2018 முடிய (15 நாட்கள்) கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்  நடத்தப்பட உள்ளது.

இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும்  தினமும் முட்டை / பால் வழங்கப்படுவதுடன், பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் கலந்துகொண்ட அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் பயிற்சி முகாமில் பங்குபெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும்.

எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளியில் பயிலும் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்கள் மேற்கண்ட கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகின்றது.   

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...