Pages

Thursday, April 5, 2018

பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், பேராவூரணி பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (05.04.2018)  நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பட்டுக்கோட்டை நகராட்சி, பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியங்கள், பேராவூரணி, அதிராம்பட்டிணம், மதுக்கூர், பெருமகளுர் பேரூராட்சிகள் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை கலந்தாய்வு மேற்கொண்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை பேசியதாவது;
ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் குடிநீர், சாலை, எல்.இ.டி. தெரு விளக்கு, தனி நபர் கழிப்பறைகள் போன்ற அத்தியாவசியப் பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விரைந்து செய்து கொடுக்க வேண்டும். குடிநீர் பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுத்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் இடத்தில் துரிதமாக செயல்பட்டு சரி செய்ய வேண்டும். பழுதடைந்த சாலைகள், சிறு பாலங்களை கண்டறிந்து உடனடியாக சீர் செய்ய வேண்டும். நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் சாலைப் பணிகள், வடிகால் பணிகள், பூங்கா பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நீர்நிலைகளில் வண்டல் மண் எடுப்பதற்கு வட்டாட்சியர்கள் அனுமதி அளிக்க வேண்டும். அலுவலர்கள் அனைவரும் களத்திற்கு நேரடியாக சென்று வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் சி.வி.சேகர், ஊராட்சிகள் உதவி இயக்குநர் முருகேசன், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு, பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் ஷேக் அலாவுதீன், வட்டாட்சியர்கள் ராமச்சந்திரன் (பட்டுக்கோட்டை), பாஸ்கரன் (பேராவூரணி) மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...