Pages

Tuesday, April 10, 2018

மின் மோட்டார்கள் பறிமுதல்!

பேராவூரணி ஏப்.10
பேராவூரணி பேரூராட்சி 8, 9 ஆகிய வார்டுகளில் சீரான குடிநீர் விநியோகிக்கப்படவில்லை எனக்கூறி, முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் டாக்டர் மு.சீனிவாசன் தலைமையில் பெண்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தீக்கதிரில் செவ்வாய் அன்று செய்தி வெளியானது

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், பேரூராட்சிகள் துறை தஞ்சை  இணை இயக்குநர்  உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பேரூராட்சி செயல் அலுவலர் மு.பொன்னுசாமிக்கு அறிவுறுத்தினார். இந்நிலையில் செவ்வாய் அன்று காலை பேரூராட்சி தலைமை எழுத்தர் வி.சிவலிங்கம் தலைமையில், குடிநீர் திட்ட பணியாளர் யோ.சார்லஸ், துப்புரவு மேற்பார்வையாளர்கள் வீரமணி, சந்தானசெல்வம், மின் பணியாளர் இ.கோவிந்தசாமி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் செங்கொல்லை, ரயில்வே லைன் கிழக்கு தெரு உள்ளிட்ட 8,9 ஆவது வார்டுகளில் வீடுவீடாகச் சென்று ஆய்வு நடத்தினர். 

இதில் குடிநீர் குழாய் இணைப்புகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு, மின்மோட்டாரைப் பயன்படுத்தி தண்ணீர் உறிஞ்சுவதும், தோட்டங்கள் மற்றும் தென்னந்தோப்புகளுக்கு பயன்படுத்துவதும் கண்டறியப்பட்டு, 20 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) மு.பொன்னுசாமி கூறுகையில், "வரும் கோடை காலத்தையொட்டி, மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி, தடையின்றி சீரான குடிநீர் விநியோகம் செய்ய பேரூராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின்மோட்டார் பயன்படுத்தி தண்ணீர் உறிஞ்சுவது சட்டப்படி குற்றமாகும். காவல்துறை மூலமாக நீதிமன்ற நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். அவ்வாறு பயன்படுத்தப்படும் மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படும். மேலும் கோடை வறட்சியை சமாளிக்கும் வகையில் 6 இடங்களில் 10 குதிரைத்திறன் கொண்ட நீர்மூழ்கி மோட்டார் மற்றும் 8 இஞ்ச் அளவிலான ஆழ்துளைக்கிணறு ரூ 39 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. மேலும் பிரச்சினைகள் ஏற்படும்போது சமாளிக்க ரூ 3 இலட்சம் மதிப்பீட்டில் 6 பதிலி மின்மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கோடையை சமாளிக்க குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி, பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்" என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...