Pages

Wednesday, April 11, 2018

காதிர் முகைதீன் கல்லூரியில் 'விலங்கியல் வளங்கள்' அறிமுக விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.11
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதுகலை மற்றும் ஆராய்ச்சி விலங்கியல் துறை சார்பில், 'விலங்கியல் வளங்கள்' அறிமுக விழா, விலங்கியல் துறை இறுதியாண்டு மாணவர்கள் மற்றும் விலங்கியல் மன்ற நிறைவு விழா, பேராசிரியர் எஸ். ரவீந்திரன் பணி நிறைவு விழா ஆகியவை புதன்கிழமை கல்லூரியில் நடைபெற்றது.

விழாவிற்கு, கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்து, விலங்கியல் வளங்கள் பற்றிய இணையதள சேவையை தொடங்கி வைத்து பேசியது;
கல்லூரியின் விலங்கியல் துறை மூலமாக முதன் முதலாக 'விலங்கியல் வளங்கள்' பற்றிய இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதில், மாணவர்களுக்கு தேவையான உயர் கல்வி, தேர்வுக்குறிப்புகள், ஆய்வு அறிக்கைகள், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள தகவல்கள் இடம்பெற்றுள்ளது. இந்தச் சேவையை மாணவ, மாணவிகள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இச்சேவையை வழிநடத்தும் கல்லூரி பேராசிரியர் ஏ.அம்சத் அவர்களுக்கு நன்றி' என்றார்.

விழாவில் முன்னிலை வகித்த விலங்கியல் துறைத்தலைவர் பி. குமாரசாமி பேசியது;
விலங்கியல் வளங்கள் பற்றிய சேவையில் கல்லூரி விலங்கியல் துறையின்  பேராசிரியர்கள் எழுதிய புத்தகங்கள், கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் இடம்பெற்று உள்ளது. இவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து மாணவ, மாணவிகள் பயன்பெற வேண்டும்' என்றார்.

தொடக்கத்தில், கல்லூரி விலங்கியல் மன்ற ஒருங்கினைப்பாளர் ஏ. அம்சத் வரவேற்று, விலங்கியல் வளங்கள் பற்றி அறிமுக உரை நிகழ்த்தினார்.

விழாவில், பணி நிறைவு பெற்ற கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் எஸ். ரவீந்திரன் அவர்களின் சேவையை பாராட்டி நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது.

விழாவில், விலங்கியல் துறை பேராசிரியர்கள் ஓ. சாதிக், வி. கானப்ரியா, ஏ. மகாராஜன், ஜே. சுகுமாரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முடிவில், பேராசிரியர் முத்துகுமாரவேல் நன்றி கூறினார்.

இவ்விழாவில், கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...