Pages

Thursday, April 5, 2018

அதிராம்பட்டினம் முழுவதும் கடை அடைப்பு போராட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.05
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக்கண்டித்து,
திமுக தலைமையிலான திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் உட்பட எதிர்கட்சிகள் சார்பில், தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அதிராம்பட்டினத்தில் முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் வர்த்தகப் பகுதிகள் பேருந்து நிலையம், பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, கடைத்தெரு, வண்டிப்பேட்டை, ஈஸ்ட் கோஸ்ட் சாலை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள வர்த்தகக் கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் இன்று வியாழக்கிழமை காலை முதல் அடைக்கப்பட்டுள்ளது. அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் பயணிகள் வருகை குறைந்து காணப்படுத்தால், வெறிச்சோடி காணப்படுகின்றன.

முன்னதாக, திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி சார்பில், கடை அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு வர்த்தகர்களை சந்தித்து கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
 


 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...