Pages

Thursday, April 5, 2018

சவுதியில் வீட்டு பணிப்பெண் மகனை தனது பேரன் போன்று நடத்தும் அரேபியர்!

அதிரை நியூஸ்: ஏப்.05
சவுதியில் வீட்டு பணிப்பெண்ணின் மகனையும் தனது பேரனை போன்றே நடத்தும் அரேபியர்

சவுதி அரேபியாவின் ஹாயில் பிரதேசத்தில் (Hail Governorate) வசிப்பவர் உத்மான் என்ற சவுதி அரேபியர். இவர் தன்னுடைய வீட்டில் பணிப்பெண்ணாக இருக்கும் பிலிப்பைன் தேசத்து பெண்ணின் மகனையும் அவருடன் சேர்ந்து வாழ அனுமதித்துள்ளதுடன் தனது பேரனைப் போலவே பாவித்து அவனுக்குரிய கடமைகளையும் நிறைவேற்றி வருகிறார்.

பொதுவாக வீட்டுப் பணியாளர்கள் என்போர் வருடக்கணக்கில் குடும்பத்தை பிரிந்து தனிமை வாழ்க்கை தான் வாழ வேண்டி வரும், அரிதாக அவர்களின் துணையும் அதேவீட்டில் பணியாற்றினால் மட்டுமே இருவரும் சேர்ந்து வாழ முடியும். இப்பெண்ணின் கணவரும் முன்பு அதே வீட்டில் பணியாற்றிய போதும் இவ்வாறே சேர்ந்து வாழ்ந்துள்ளார், தற்போது இன்னொரு இடத்தில் வேலை தேடிக் கொண்டதன் மூலம் கணவர் சவுதியிலேயே வேறொரு இடத்தில் உள்ளார்.

சவுதி முதலாளியின் உயர்ந்த குணத்தை போற்றும் வகையில் இந்த பிலிப்பைனி பணிப்பெண் தனது மகனுக்கும் உத்மான் என்றே பெயரிட்டுள்ளார். இந்த சிறுவன் உத்மான் சவுதியரின் பிற பேரக்குழந்தைகளுடன் இணைந்து அவர்கள் பயிலும் பள்ளியிலேயே பயில்கின்றார், அவர்களுடனேயே ஒன்றாக விளையாடுகின்றார், உண்ணுகின்றார், உறங்குகின்றார்... இப்படி இன்னும் பட்டியலிட முடியும் என்றாலும் சுருக்கமாக சொல்வதென்றால் அவரது குடும்பத்தில் ஒருவராக வளர்க்கப்படுகின்றார்.

மிக முக்கியமாக, இந்தச் சிறுவன் சவுதி அரேபியர்கள் பேசும் அரபி பாஷையை மிகத்துள்ளியமாக பேசுகின்றார், எழுதுகின்றார். இவரது தாய்மொழியான 'தகலோக்' (Tagalog) மொழியில் சில வார்த்தைகள் தான் தெரியுமாம். முழுமையாக தாய்மொழியை கற்றுத்தர முயற்சித்துக் கொண்டுள்ளாராம். சவுதியரின் தயாள குணமும் அச்சிறுவனின் அரேபிய மொழி வசீகரமும் சமூக வலைத்தளங்கள் வழியாக சர்ர்ரென... உச்சத்தில் பறந்து கொண்டுள்ளது. நாமும் வாழ்த்துவோம்!

நாடு போற போக்குல இப்படி நல்லவங்க வாழ்கிற கடைசி தலைமுறைய மாறிடுமோ என்கிற பயமும் நிழலாடுகிறது.

Source: StepFeed / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...