Pages

Saturday, April 7, 2018

ஆஸ்திரேலியா பிரிஸ்பேன் விமான நிலையத்தை அலறவிட்ட இந்தியப் பெண் பயணி!

அதிரை நியூஸ்: ஏப்.07
பலவகையான விமானப் பயணிகளை பார்த்திருப்போம் அதிலும் சிறப்பாக பல விமானப் பயணிகள் தங்களுடைய 'பயோ டாட்டா'வில் (Bio - Data / CV) அடிக்க வேண்டிய விஷயங்களை எல்லாம் எழுதி தங்களுடைய லக்கேஜ் மீது ஒட்டிக் கொண்டு செல்வர். சிலர் செக்-இன் கவுண்டர்களில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்களுடன் திருப்திபட்டுக் கொள்வர், அதுவே போதுமானதும் கூட.

மும்பை மாநகரம் 1995 ஆம் ஆண்டு பெயர் மாற்றப்படும் முன்பு பம்பாய் என அழைக்கப்பட்டு வந்ததை அறிவீர்கள் அப்போது அதற்கு கொடுக்கப்பட்ட ஏர்லைன் குறியீடான BOM என்பதே இன்னும் நடைமுறையில் உள்ளது. நமது சென்னையும் அவ்வாறு தான் முன்பு மெட்ராஸ் என அழைக்கப்பட்ட போது வழங்கப்பட்ட MAA என்ற குறியீடே தற்போதும் நடைமுறையில் உள்ளதையும் ஓரு புரிதலுக்காக தருகிறோம்.

இனி விஷயத்திற்குள் வருகிறோம், மும்பையிலிருந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்குப் பறந்த பெண் பயணி ஒருவர் தனது லக்கேஜின் மீது அடையாளத்திற்காக எழுதுவதாக இருந்தால் BOMBAY to BRISBANE என இவ்வாறு முழுமையாக அல்லது BOM to BNE என இவ்வாறு சுருக்கமாகத் தான் எழுதியிருக்க வேண்டும் ஆனால் அவர் எழுதி ஒட்டிக் கொண்டு சென்ற வாசகமோ "BOMB to BRISBANE" என இவ்வாறிருக்க வந்தது வினை.

மும்பை விமான நிலையத்தில் எந்த பிரச்சனையையும் சந்திக்காத அந்த பெண்ணின் லக்கேஜ் பிரிஸ்பேன் விமான நிலையத்தின் லக்கேஜ் சேகரிக்கும் பகுதியில் இருக்கும் போது ஒரு ஊழியரின் கண்ணில்  "BOMB to BRISBANE"  என்ற இந்த எழுத்துக்கள் பட்டுவிட உடனடியாக அந்த லக்கேஜ் சேகரிப்பு பகுதியே (Baggage carousel) தற்காலிகமாக மூடப்பட்டது. பின் தீங்கிழைக்கும் எண்ணமின்றி தவறுதலாக நடைபெற்ற சம்பவமாக கருதப்பட்டு அப்பெண் பயணியும் அவரது லக்கேஜூம் விடுவிக்கப்பட்டன.

'ஒரு நிமிசம் தல சுத்திருச்சி' என்பது போன்ற காமெடியாகி போனவரை சந்தோஷமே.

Sources: Newsweek / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...