Pages

Friday, April 6, 2018

தஞ்சை மாவட்டத்தில் தொற்று நோய் கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்ட அரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் தொற்று நோய் கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்ற (06.04.2018) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கு தனித்தனி வார்டு அமைத்திட வேண்டும். படுக்கைகளில் கொசு வலை பயன்படுத்த வேண்டும்.  வார்டுகளில் உள்ள ஜன்னல்களில் கொசு வலை அமைத்து, கொசு உள்வருவதை தடை செய்ய வேண்டும். மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பகுதிகளில் மாநகராட்சியினர் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவற்றை அழித்திட வேண்டும்.  இன்புளுயன்ஸா நோய் பரவுவதை தடுப்பதற்கு வார்டுகளில் உள்ள கட்டில், மேஜை, கதவுகள், கைப்பிடிகள் போன்றவற்றில் கிருமி நாசினிகள் கொண்டு தொற்று நீக்கம் செய்யப்பட வேண்டும்.

இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் டெங்கு, சிக்குன்குனியா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கிட போதுமான அளவு மருந்துகள் இருப்பில் வைக்கப்பட வேண்டும்.

செயற்பொறியாளர், பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்படும் அரசு கட்டிடங்களில் மேற்கூரை பகுதி, கட்டிட நுழை வாயில்  பகுதி, சன் சைட் போன்ற பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி நீர் தேங்காமல் பராமரிப்பதுடன், கழிவு நீர் மற்றும் மழை நீரினை முறையாக அப்புறப்படுத்தி கொசுக்கள் உற்பத்தியாகாத வண்ணம் பராமரிக்கப்பட வேண்டும்.

செயற்பொறியாளர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகள், தரை மட்ட நீர் தேக்க தொட்டிகள் ஆகியவற்றை 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்து பராமரிக்கப்பட வேண்டும்.  மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளின் கீழ் கழிவு நீர் தேங்கா வண்ணம் சுத்தம் செய்ய வேண்டும். குடி தண்ணீர் குளோரினேசன் செய்து குடிநீர் வழங்க வேண்டும். 

கொள்ளைநோய் தொடர்பாக பொது மக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் அலுவலக வளாகம் போன்ற முக்கிய பகுதிகளில் விழிப்புணர்வு பதாகைகள் வைத்திட வேண்டும். 

மாநகராட்சி, நகராட்சிகள், உதவி இயக்குநர், பேரூராட்சி, உதவி இயக்குநர், ஊராட்சிகள், செயல் அலுவலர்கள், பொது மக்கள் கூடும் இடங்களான சமுதாய கூடம், திரையரங்குகள், திருமண மண்டபங்கள் ஆகிய இடங்களில் கொசு உற்பத்தியாகாதாவாறு பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சித் துறையில். பராமரிக்கப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, தரை கீழ் நீர்தேக்க தொட்டி, தரை மட்ட நீர்தேக்க தொட்டி ஆகியவற்றை மாதம் இருமுறை (15 நாட்களுக்கு ஒருமுறை) சுத்தம் செய்ய வேண்டும்.  ஒவ்வொரு முறையும், நீரேற்றம் செய்யும் பொழுது குளோரினேசன் செய்யப்பட்ட குடிநீர் வழங்கப்பட வேண்டும்.

பொது மக்களிடையே சுகாதாரம் மற்றும் கொசு ஒழிப்பு முறைகள் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்.

முதன்மைக் கல்வி அலுவலர், பள்ளி வளாகங்கள் சுத்தமாக பராமரிக்க வேண்டும். பள்ளி மாணவர்களிடையே கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதல், குடிநீர் தொட்டிகளை 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்து குடிநீர் வழங்க வேண்டும்.

மாணவ மாணவியர்களுக்கு முறையாக கை கழுவுதல் பற்றிய விழிப்புணர்வு பற்றி செயல்முறை விளக்கம் மூலம் செய்து காண்பிக்க வேண்டும். மாணவர்கள் அவர் தம் வீடுகளை சுற்றி கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவ்விடங்களை அழித்திட மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்க வேண்டும்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்ää ஊட்டச் சத்து மையங்களில் உட்புறம் மற்றும் வெளிபுறங்களில் சுத்தம் செய்ய வேண்டும்.  நீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து அப்புறப்படுத்தி கொசு உற்பத்தியினை தடுத்திட வேண்டும்.  முறையாக கை கழுவுதல் பற்றிய விழிப்புணர்வு மாணவர்களிடையே செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்க வேண்டும்.

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர், தங்கள் துறையால் பராமரிக்கப்பட்டு வரும் அரசு கட்டிங்கள், மேற்கூரை, கட்டிட நுழை வாயில் பகுதி, சன் சைட் ஆகிய இடங்களில் குப்பைகளை அகற்றி நீர் தேங்காமலும் பராமரித்து கழிவு நீர் மற்றும் மழை நீரினை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.  கொசுப்புழு உற்பத்தியாகாத வண்ணம் பராமரிக்க வேண்டும். அனைத்து மாணவ மாணவியர் விடுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும்.

மாவட்ட சித்த மருத்துவர் காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு  வரும் அனைத்து வெளி நோயாளிகளுக்கும் நிலவேம்பு கசாயம், மலைவேம்பு கசாயம் மற்றும் பப்பாளி சாறு வழங்கிட வேண்டும். தேவையான அளவு மருந்துகள் இருப்பில் வைத்திட வேண்டும்.

பிளாஸ்டிக் கப்புகள், பேப்பர் பிளேட்டுகள், டயர், தேங்காய் ஓடு, ஆட்டுக்கல் ஆகிய இடங்களில் நீர் தேங்காதவாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், வீடுகளில் பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி வைத்தால் அதனை மூடி வைக்க வேண்டும். குடிதண்ணீரை மூன்று நாட்களுக்கு மேல் சேமித்து வைத்து பயன்படுத்தக்கூடாது.  மூன்று நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.  இது போன்ற விழிப்புணர்வுகள் பொது மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

அரசு மதுபான கடைகளில் உள்ள பார்களில் பிளாஸ்டிக் கப்புகள், பேப்பர் பிளேட்டுக்ள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், மழை காலங்களில் நீர் அதிக அளவில் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்கள் தோன்றுகின்றன. ஆகவே இவை அப்புறப்படுத்த சுத்தமாக வைத்துக்கொள்ள டாஸ்மாக் பொது மேலாளர் மதுபான கடைகளை அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி.மந்திராசலம், ஊராட்சிகள் உதவி இயக்குநர் முருகேசன், துணை இயக்குநர், சுகாதாரப்பணிகள் டாக்டர் அ.சுப்ரமணி, மாநகராட்சி ஆணையர் காளிமுத்து  மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயல் அலுவலர்கள், மாநகராட்சி ஆணையர், நகராட்சி ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...