Pages

Friday, April 6, 2018

அபுதாபியில் நடந்த ரத்ததான முகாம் (படங்கள்)

அபுதாபி : அபுதாபி அரேபியா டாக்சி நிறுவனத்தில் 04.04.2018 புதன்கிழமை ரத்ததான முகாம் நடந்தது. அபுதாபி ரத்ததான மையத்துடன் இணைந்து இந்த ரத்ததான முகாம் நடந்தது.

அபுதாபி அரேபியா டாக்சி நிறுவன மேலாளர் அஸ்பாக் அகமது தலைமையில் இந்த ரத்ததான முகாம் நடந்தது. இந்த முகாமில் டிரைவர்களும், ஊழியர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
அமீரகத்தில் விபத்து, அறுவை சிகிச்சை உள்ளிட்ட தேவைகளுக்காக ரத்தம் அதிகம் தேவைப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு இந்த ரத்ததான முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் அமீரகத்தில் இந்த ஆண்டு ஜாயித் ஆண்டாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆதரவளிக்கும் விதமாகவும் இந்த முகாம் நடத்தப்பட்டது.
ரத்ததான முகாமுக்கு தேவையான ஏற்பாடுகளை முதுவை ஹிதாயத், சையது இஸ்மாயில் உள்ளிட்ட குழுவினர் சிறப்புடன் செய்திருந்தனர்.
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...