Pages

Saturday, April 14, 2018

சவுதியில் கீழக்கரை மக்கள் சங்கமம் நிகழ்ச்சி ~ காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரிக்கை!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தம்மாம் மாநகரில் கீழக்கரை மக்கள் சங்கமம் கோரிக்கை.

சவுதி அரேபியா, தம்மாம் மாநகரில் கீழக்கரை மக்கள் சங்கமம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை பகல் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கீழக்கரையை சார்ந்த 50க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என கலந்து கொண்டனர். குழந்தைகளுக்கான அறிவுத்திறன் போட்டிகளை பிரபுக்கள் தெரு ஃபுர்கான் நடத்தி பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தம்மாம் சோஷியல் ஃபோரத்தின் ரூரல் ஏரியா தலைவர் ரமீஸ்தீன்,சோஷியல் ஃபோரத்தின் முன்னாள் மத்திய துணை தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி ஆகியோர் கலந்து கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தலின் அவசியம் குறித்து உரையாடினர்.

நிகழ்ச்சியில் மிகவும் ஆர்வமாக கௌபத் அலி,அப்துல் கரீம்,சபீக் ரஹ்மான்,தமீம்,நாசர்,அன்சாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அஸாருதீன் வாஜிது அலி,ஃபயர் பைசல்,சோஷியல் ஃபோரம் தம்மாம் பிரிவின் நிர்வாக குழு உறுப்பினர் சதுருதீன்,ஜாஹிர் ஹுசைன்,நசீர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

முடிவில் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய பாஜக அரசை வலியுறுத்தும் பதாகையை ஏந்தி தமிழக விவசாயிகளின் துயர் நீங்கிட குரல் எழுப்பினர்.

தகவல்:கீழை ஜஹாங்கீர் அரூஸி.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...