Pages

Saturday, April 7, 2018

பிலால் நகர் பகுதி முழுவதும் பகல், இரவில் குறைந்தழுத்த மின்சாரம் விநியோகம்~ பொதுமக்கள் கடும் அவதி!

அதிராம்பட்டினம், ஏப்.07
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் துணை மின்நிலையத்தில் இருந்து, ஏரிப்புறக்கரை கிராம ஊராட்சி, பிலால் நகர், நண்டுவெட்டி வெப்பல், தெற்கு ஆதிதிராவிடர் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. இப்பகுதியில், பகல், இரவு நேரங்களில் குறைந்த மின் அழுத்தப் பிரச்னை இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இப்பகுதியில், பழுதடைந்த மின்கம்பிகளை மாற்றித்தரவும், 250 கே.வி திறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறியது;
அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச்சாலை பிலால் நகர் பகுதியில் அமைந்துள்ள மின்மாற்றி 100 கே.வி திறன் கொண்டது. இம்மின்மாற்றியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புதாரர்கள், பெட்ரோல் நிலையம், வெல்டிங் பட்டறைகள் உள்ளிட்ட தொழிற்கூடங்கள் மின் இணைப்புகளை பெற்றுள்ளன. இப்பகுதியில் உள்ள பெரும்பாலான மின்கம்பிகள் அனைத்தும் மிகவும் பழுதடைந்து அறுந்து கீழே விழும் அபாயம் உள்ளது.

இதனால் அதிக மின் அழுத்தம் ஏற்பட்டு அடிக்கடி மின்மாற்றியில் பழுது ஏற்படுகிறது. இரவு நேரங்களில் குறைந்தழுத்த மின்சாரம் வருவதால், டியூப் லைட் சரியாக எரிவது இல்லை. மின் விசிறிகள், ஏசி, ஃபிரிஜ் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள் சரிவர இயங்க வில்லை. இதனால் வீடுகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரவு நேரங்களில் தூக்கம் இல்லாமல் அவதிக்குள்ளாகின்றனர். பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால், மின் விசிறிகள் இயங்காத நிலையில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இக்குறைபாட்டை போக்க, இப்பகுதியில் மிகவும் பழுதடைந்த மின்கம்பிகளை மாற்றிவிட்டு, புதிய மின்கம்பிகளை அமைக்க வேண்டும். அடிக்கடி பழுது ஏற்படும் பழைய மின்மாற்றியை மாற்றிவிட்டு, புதிதாக  250 கே.வி திறன் கொண்ட மின்மாற்றியில், தொழிற்கூடங்களுக்கும், குடியிருப்புகளுக்கும் தனித்தனியாக பீடர் லைன் அமைத்து தருவதற்கு சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...