Pages

Friday, April 20, 2018

காஷ்மீர் சிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து அதிராம்பட்டினத்தில் நாம் மனிதர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.20
காஷ்மீரில் ஆஷிஃபா என்ற 8 வயது சிறுமியை கோவில் கருவறைக்குள் அடைத்து வைத்து கற்பழித்து, கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், இக்கொடூர குற்றத்திற்கு நீதி வேண்டியும், நாம் மனிதர் கட்சி தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆர்பாட்டத்திற்கு, அக்கட்சியின் தஞ்சை மாவட்டத் தலைவர் எம்.ஏ சரபுதீன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக மக்கள் விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் தங்க. குமரவேல், நாம் மனிதர் கட்சி திருவாரூர் மாவட்டச் செயலாளர் பி.எம் முகமது சுலைமான், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் த. உதய சூரியன், திருவாரூர் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் ஆதவன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் சிறுமி ஆஷிபா படுகொலைக்கு நீதி கேட்டும், குற்றவாளிகளை தண்டிக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

முன்னதாக, அதிராம்பட்டினம் கடைத்தெரு பகுதியில் இருந்து கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி பேரணியாக புறப்பட்டு ஆர்பாட்டம் நடைபெறும் பேருந்து நிலையம் சென்றனர்.
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...