Pages

Friday, April 13, 2018

தஞ்சை மாவட்டத்தில் முதல் கட்டமாக அம்மா ஸ்கூட்டர் விநியோகம் (படங்கள்)

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தினை வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம்  முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (13.4.2018) வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து துறை வாரியாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஓராண்டு சாதனை புத்தகத்தினை  வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு வெளியிட,  மாநிலங்களைவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் பெற்றுக் கொண்டார்.

வேளாண்மைத்துறை அமைச்சர் அம்மா இரு சக்கர வாகனத்தினை வழங்கி பேசியதாவது;
தொலைநோக்கு பார்வை கொண்ட மறைந்த முன்னாள் முதலமைச்சர் அவர்கள் பெண்கள் தங்களது பணியிடங்களுக்கு செல்வதில் உள்ள சிரமங்களை உணர்ந்து இந்தியத் திருநாட்டிலேயே முதன்முறையாக மகளிர் பணியிடங்களுக்கும், பிற வேலைகளுக்கும் எளிதில் செல்லும் வகையில் இருசக்கர வாகனங்கள் வாங்க 50 சதவீத மானியம் வழங்கும் ஒரு முன்னோடி திட்டத்தினை தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தார்.

இன்றைய நவீன உலகத்தில் ஆண், பெண், இளையவர் மற்றும் முதியோர் என வயது வித்தியாசமின்றி அனைவரும் பணியிடங்களுக்கு செல்லவும், பிற இடங்களுக்கு செல்லவும், போக்குவரத்து சாதனங்கள் இன்றியமையாதனவாகும்.

முறைமாற்றுப்பணி தொலைதூரப் பணியிடங்கள் போக்குவரத்து வசதி குறைந்த இடங்களில் அமைந்துள்ள நிறுவனங்கள் இரவு நேரப் பணிகள் போன்றவை இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. அரசு மற்றும் தனியார் வாகனங்களைக் காட்டிலும் தங்களது தனிப்பட்ட வாகனங்களில் பணியிடங்களுக்கும், பிற இடங்களுக்கும் செல்வதில் பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
மகளிர் நலனில் அக்கறை கொண்டு மறைந்த முன்னாள் முதல்வர் அவர்களின் வாக்குறுதியின்படி “பணிபுரியும் மகளிருக்கான அம்மா இருசக்கர வாகனத் திட்டம்” (மானியத்துடன் கூடியது) தமிழக அரசால் 06.01.2018-இல் ரூ.25,000/- அல்லது வாகனத்தின் விலையில் 50% இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

மாநில அளவில் வருடத்திற்கு ஒரு இலட்சம் வாகனங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மக்கள் தொகையில் மகளிரின் விகிதாச்சார அடிப்படையில் ஊரகப் பகுதிகளுக்கு 2260, நகர்புற பகுதிகளுக்கு 1243 என மொத்தம்  3503 என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சமுதாய அமைப்புகள், வணிக நிறுவனங்கள், அரசு உதவி பெறும் அமைப்புகள் ஆகியவற்றில் தினக்கூலி, தொகுப்பூதியம், ஒப்பந்த ஊதியம் அடிப்படையில் பணிபுரியும் நீண்ட தூரம் பயணம் செய்து தங்கள் ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் பொருள் ஈட்டும் முக்கிய வருவாய் ஆதாரமாக திகழக்கூடிய, ஓட்டுநர் உரிமம் உள்ள 18 முதல் 40 வயதுக்குட்பட்ட மகளிர் திட்டத்தின் விதிகளுக்குட்பட்டு பயன்பெற ஏதுவாக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், மகளிரை குடும்பத் தலைவராகக் கொண்ட குடும்ப உறுப்பினர்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டடோர், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் பணி நிமித்தமாக தாங்கள் பணியாற்றும் இடங்களுக்கு அல்லது வங்கிகளுக்கு தினசரி நீண்ட தூரம் பயணிக்கக் கூடிய மகளிர்க்கு தேவை அடிப்படையில் 125CC க்கு மிகாத திறன் கொண்ட Gearless / Auto Geared  01.01.2018-க்கு பிறகு தயாரிக்கப்பட்ட இருசக்கர வாகனம் வாங்கிக் கொள்ள அதிகபட்சமாக ரூ.25,000/- அல்லது வாகனத்தின் விலையில் 50% இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது.  மாற்றுத்திறனாளி மகளிர் மூன்று சக்கரம் பொறுத்திய வாகனமும் வாங்கிக் கொள்ளலாம்.

நமது மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 3503 வாகனங்களில் ஐந்து கட்டங்களாக 277 பயனாளிகள் மாவட்ட அளவிலான தேர்வுக் குழுவினால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சொந்த நிதியில் வாங்குபவர்களுக்கு மான்யம் அவரவர்களின் சேமிப்புக் கணக்கில் செலுத்தப்படும். வங்கி, நிதி நிறுவனத்திலிருந்து வாங்குபவர்களுக்கு மான்யத் தொகை அவர்களின் கடன் கணக்கு எண்ணிற்கு விடுவிக்கப்படும்.

அரசு வேலை மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் மகளிர்களுக்கு இரு சக்கர வாகனங்கள் வழங்கப்படவுள்ளது. தற்போது முன்னுரிமை தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளில் முதற்கட்டமாக 109 பயனாளிகளுக்கு அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின்கீழ்  மான்யமாக தலா ரூ.25,000/- வீதம் மொத்தம் ரூ.27,21,491/- பயனாளிகளுக்கு  அவரவர் வங்கி சேமிப்புக் கணக்குகளில் விடுவிக்கப்படவுள்ளது. 

மேலும், இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தும் பெண்கள் ஓட்டுநர் உரிமம் பெறுவது போன்று கண்டிப்பான முறையில் தலைக்கவசம் அணிந்து பயணிக்க வேண்டும். அதே போல் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும் தலைகவசம் அணிய வலியுறுத்தி வாகனங்களை பயணிக்கும் போது இரண்டு நபர்களும் தலைகவசத்துடன் பயணிக்க வேண்டும். இவ்வாறு  வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மாண்புமிகு மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மரக்கன்றுகளை வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு,  மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் மரக்கன்றுகளை நாட்டார்கள்.  இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் 70 ஏக்கர் தரம் குன்றிய வனப்பகுதிகளில் சுமார் 24,138 மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து புதிய பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க சிறு  புகைப்படக் கண்காட்சியினை வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு அவர்கள் திறந்து வைத்தார். இப்புகைப்படக் கண்காட்சியில் தமிழக முதலமைச்சர் அவர்களின் பதவியேற்பு நிகழ்ச்சி,  தமிழக முதல்வர் அவர்கள் துறை வாரியாக நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், தஞ்சாவூர் மாவட்டத்தில் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் ஆகியவை இடம் பெற்றிருந்தன.

இவ்விழாவில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.கே.பாரதிமோக, பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் சி.வி.சேகர்,  மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், முன்னாள் மாநகராட்சி மேயர் சாவித்திரிகோபால், பால்வள கூட்டுறவு சங்கத்தலைவர் காந்தி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழுதலைவர் அமுதாராணி ரவிச்சந்திரன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ராம்குமார், நிலவள வங்கித் தலைவர் துரை.வீரணன், நிக்சல் கூட்டுறவு வங்கித் தலைவர் அறிவுடைநம்பி, துணைத்தலைவர் புண்ணியமூர்த்தி, இயக்குநர் சரவணன், கல்வி புரவலர் ரமேஸ், முன்னாள் ஒன்றியத் தலைவர்கள் கோபிநாதன், சூரியநாராயணன், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் சோழபுரம் அறிவழகன் முன்னாள் ஒன்றிய துணைத்தலைவர்கள் இளங்கோவன், சாமிவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வரதராஜன், ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் இந்துபாலா, மாவட்ட வன அலுலவர் குருசாமி, வனத்துறை அலுவலர் ஜோதிகுமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.சிங்காரம்  மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...