Pages

Saturday, April 7, 2018

ரோஹிங்கியா முஸ்லீம்களை ஏற்றுக்கொள்வோம் ~ பிலிப்பைன்ஸ் அதிபர் அறிவிப்பு!

அதிரை நியூஸ்: ஏப்.07
ஒரு காலத்தில் தனிநாடாக இருந்த அரக்கான் பிரதேசம் (ரோஹிங்கியா) ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் வந்தபின் அருகாமை நாடான பர்மாவுடன் (மியான்மார்) இணைத்து ஆண்டதால் அதன் தனிநாடு எனும் இறையாண்மையை இழந்தது. ஆங்கிலேயர்கள் பர்மாவுக்கு விடுதலை கொடுத்து சென்றபோதும் அதனை தனிநாடாக திருப்பித் தராமல் பர்மாவின் கீழேயே விட்டுச் சென்றனர். அன்று முதல் நாடாற்ற சமுதாயமாக்கப்பட்ட ரோஹிங்கிய முஸ்லீம்கள் அடைந்து வரும் சொல்லெணாத் துயர்கள் இன்று உச்சத்தை அடைந்துள்ளது.

இனப்படுகொலைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் அநீதிக்குள்ளாக்கப்பட்ட அம்மக்களுக்கு உரிய புகலிடம் கொடுக்க அண்டை நாடுகளான இந்தியா, தாய்லாந்து போன்றவை முற்றாக மறுத்துவிட்ட நிலையில் பங்களாதேஷ் மட்டும் சர்வதேச நாடுகளின் வற்புறுத்தலுக்குப் பின் சுமார் 7 லட்சம் அகதிகளுக்கு புகலிடம் அளித்துள்ளதுடன் அவர்களை மீண்டும் துரத்திவிட தருணம் பார்த்துக் கொண்டுள்ளது.

இந்நிலையில், உலகின் மிகவும் பரிதாபத்திற்குரிய மக்களான ரோஹிங்கியா அகதிகளை ஏற்றுக்கொள்வோம் என அறிவித்திருக்கின்றார் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரீகோ டூயர்டே அவர்கள். மேலும் ஐரோப்பிய நாடுகளும் ரோஹிங்கியாக்களை ஏற்றுக் கொள்ள முன்வர வேண்டும் எனவும் மியான்மாரில் நடைபெறும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தி ஒரு நிரந்தர தீர்வு காணவும் ஐக்கிய நாடுகள் சபை முன்வர வேண்டும் ஆனாலும் அது அவர்களால் முடியாது என்பதாலேயே இதை ஒரு இனத்திற்கு எதிரான படுகொலைகள் என்கிறேன் எனவும் இடித்துரைத்தார்.

மியான்மார் அரசும் ராணுவமும் பாவப்பட்ட ரோஹிங்கியா மக்களை அழித்தொழிக்கும் வேலையை செய்து வருகின்றன என்று கூறியதை மியான்மார் அரசு வழமைபோல் மறுத்துள்ளது. டூயர்டேயின் நடவடிக்கைகள் மிகவும் அதிரடியானவை. பிலிப்பைன்ஸில் போதை பொருள் வியாபாரிகளிடமிருந்து தனது நாட்டு மக்களை மீட்கும் நோக்குடன் இதுவரை பலநூறு போதை பொருள் வியாபாரிகளை போலீஸ் படையின் உதவியுடன் ஈவிரக்கத்திற்கு இடமின்றி சுட்டு வீழ்த்தியுள்ளார். மேலும் மோரோ பிரிவினைவாதிகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் இன்னொருபுறம் அவர்களிடம் அமைதி பேச்சுவார்த்தைக்கும் முயன்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிலிப்பைன்ஸ் என்பதும் ஒரு ஏழை நாடு தான் என்றிருக்கும் நிலையில் அரக்கான் முஸ்லீம்களை (ரோஹிங்கியாக்களை) ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டூயர்டே தனது முடிவில் உறுதியாக இருந்து பாவப்பட்ட ரோஹிங்கிய மக்களின் கண்ணீரை துடைக்க முன்வருவார் என நம்புவோம்.

Source: http://news.kuwaittimes.net/website/philippines-duterte-to-take-rohingya-refugees/
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...