Pages

Sunday, April 8, 2018

அதிராம்பட்டினம் தவ்ஹீத் பள்ளியில் நடந்த திருமணம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.08
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலை தவ்ஹீத்  பள்ளிவாசலில் நபிவழி முறையில் திருமணம் சனிக்கிழமை காலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சேக்தாவூது முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், மணமகன் தவ்பீக் அலி (வயது 26), 114 கிராம் ஆபரணத் தங்க நகையை பெண்ணிற்கு மஹராக கொடுத்து மணமுடித்து வைக்கப்பட்டார்.

இதில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் அவ்வமைப்பின் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் அஸ்ரப்தீன் பிர்தெளஸி கலந்துகொண்டு 'நபிவழித் திருமணம் ஏன்?' என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், கிளைத் தலைவர் நவாப்ஷா, செயலாளர் ஹைதர் அலி, பொருளாளர் அல்லா பிச்சை, துணைத் தலைவர் அ.மு அப்துல் வஹாப் மற்றும் கிளை-2 , கிளை-3 நிர்வாகிகள், மணமக்கள் உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டனர். முடிவில், நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு 'மாமனிதர் நபிகள் நாயகம்' நூல் அன்பளிப்பு செய்யப்பட்டன.
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...