Pages

Sunday, April 29, 2018

சுறா உட்பட 3 வகை விலங்குகள் தாக்கி உயிர் பிழைத்த இளைஞர்!

அதிரை நியூஸ்: ஏப்.29
4 வருடத்திற்குள் 3 முறை விலங்குகளால் தாக்கப்பட்டும் உயிருடன் உள்ள இளைஞர்

அமெரிக்காவின் கொலராடோவைச் சேர்ந்த 20 வயது இளைஞர் டைலான் மெக்வில்லியம்ஸ். இவர் ஒரு உயிர் தற்காப்பு பயிற்சியாளர் (survival training instructor), மிருகங்கள் மற்றும் ஆபத்து காலங்களில் எவ்வாறு நம்மை நாமே தற்காத்துக் கொள்வது என்பது குறித்து தனது தாத்தாவிடம் இளம்வயது முதல் பயிற்சி பெற்று பின் அதையே பிறருக்கும் கற்றுத்தந்து வருகிறார்.

இவரது 17 வயது முதல் 20 வயதே இன்னும் பூர்த்தியாக இந்த 4 ஆண்டுகளுக்குள் 3 வகையான விலங்குகளால் தாக்கப்பட்டு உயிர்பிழைத்துள்ளார். இவர் உயிர் பிழைத்த நிகழ்வுகளை அதிர்ஷ்டம் என்பதா? அல்லது கடிபட்ட நிகழ்வுகளை துரதிர்ஷ்டம் என்பதா? என பத்திரிக்கை பட்டிமன்றம்கள் நடத்திக் கொண்டுள்ளன. கெட்டதிலும் ஒரு நன்மையென நாம் கடந்து செல்வோம்.

இவரது 17வது வயதில் உடா (Utah) என்ற இடத்தில் நடந்து செல்லும் போது சுளீரென எதோ ஒன்று குத்தியுள்ளது, சப்பாத்தி கற்றாழை முள் தான் குத்திவிட்டதாக நினைத்தவருக்கு அங்கு சுருண்டு படித்திருந்த 'சங்கிலிக் கருப்பன்' (Rattlesnake) என்கிற கொடிய விஷமுள்ள பாம்பு தீண்டிய விஷயம் தெரிந்துள்ளது. 2 நாள் மருத்துவ சிகிச்கைக்குப் பின் பிழைத்துள்ளார்.

பின்பு கடந்த 2017 ஜூலை மாதத்தில் கொலராடோ மாநிலத்தில் ஒரு தற்காப்பு பயிற்சி முகாம் நடத்திவிட்டு மணலில் கடந்து உறங்கியவரை அதிகாலை 4 மணியளவில் ஒரு பெரிய கரடி ஒன்று கழுத்துப்புறமாக வந்து கவ்விப்பிடித்துள்ளது. தன்னை தாக்கியது எது என்று அறிய முடியாத நிலையிலும், தலையை திருப்பக்கூட முடியாத அந்த சூழ்நிலையிலும் அதன் கண்களை 'குத்துமதிப்பாக' தாக்கி தப்பித்துள்ளார். 9 இடங்களில் அதன் நகங்கள் அழமாக பதிந்திருந்தன, இந்த சம்பவத்திலும் 2வது முறையாக உயிர் பிழைத்தார்.

கடைசியாக கடந்த வாரம் ஏப்ரல் 19 ஆம் தேதி அன்று முன் ஹவாய் தீவில் படுத்தபடி விளையாடும் அலைச்சறுக்கு (body boarding) விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது சுமார் 2 மீட்டர் நீளமுடைய புலிச்சுறா (Tiger Shark) ஒன்று அவரது காலை தாக்கியது, அந்நிலையிலும் அந்த சுறாவை கால்களால் எட்டி உதைத்து தாக்கிவிட்டு கரையை நோக்கி விரைந்து தப்பியுள்ளார்.

சுறா தாக்கியதன் வலி தன்னுடைய ஒரு பக்க காலையே இழந்தது போன்ற உணர்வை தந்தது எனத் தெரிவித்துள்ளார். எனினும் தான் மிருகங்களை நேசிப்பதை நிறுத்தவோ, அவற்றை குறை சொல்லவோ மாட்டேன் என்னுடைய கடமையை தொடர்வேன் என தெரிவித்துள்ளார்.

Sources: bbc.com / Emirates 247
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...