Pages

Thursday, April 12, 2018

அதிராம்பட்டினத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.12
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட வலியுறுத்தியும், மீத்தேன் வாயு திட்டத்தை ரத்து செய்யக் கோரியும், கலாம் நண்பர்கள் இயக்கம் சார்பில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்பாட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, அவ்வியக்கத்தின் பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் ஜே.அலெக்சாண்டர் தலைமை வகித்தார். தஞ்சை மாவட்டத் தலைவர் கு. ராமகிருஷ்ணன் கண்டன உரை நிகழ்த்தினார்.

ஆர்ப்பாட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட வலியுறுத்தியும், மீத்தேன் வாயு திட்டத்தை ரத்து செய்யக் கோரி முழக்கமிட்டனர்.

முடிவில், பட்டுக்கோட்டை நகர பொருளாளர் மதுசூதனன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த கலாம் நண்பர்கள் இயக்கத்தினர் 30 பேர் கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...