Pages

Saturday, April 21, 2018

குவைத்தின் புதிய சட்டத்தால் விசாவை புதுப்பிப்பதில் எஞ்சினியர்களுக்கு சிக்கல்!

அதிரை நியூஸ்: ஏப்.21
குவைத்தில் சுமார் 15,000க்கு மேற்பட்ட இந்திய எஞ்சினியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் மத்திய அரசு நடத்தும் IIT, NIT போன்ற கல்வித்தரம் (?) வாய்ந்த நிறுவனங்களில் பயின்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குவைத் அரசின் புதிய சட்டப்படி, தற்போது குவைத்தில் பணியாற்றி வரும் எஞ்சினியர்களின் விசாவை புதுப்பிக்க Kuwait Society of Engineers (KSE) என்ற அமைப்பிடமிருந்து தடையில்லா சான்றை (NOC) பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த தடையில்லா சான்றை வழங்குமுன் அவர்கள் (KSE) பட்டப்படிப்பு படித்த கல்லூரியின் அங்கீகாரத்தை ஆராய்ந்த பிறகே வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (The KSE is likely to grant the NOC only after verifying the accreditation of the colleges from where they graduated).

இப்புதிய சட்டம் குறித்து அறிந்த இந்திய மத்திய அரசின் மனிதவள துறை அமைச்சகம், இந்தியாவில் எஞ்சினியரிங் கல்லூரிகளுக்கு தரம் மற்றும் அங்கீகாரம் வழங்கும் மத்திய அரசின் National Board of Accreditation (NBA) என்ற ஆணையம் 2012 ஆம் ஆண்டில் தான் அமைக்கப்பட்டது என்றாலும் அதற்கு முன்பே முறைப்படி படித்து பட்டம் பெற்ற பல எஞ்சினியரிங் பட்டதாரிகள் குவைத்தில் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் பயின்ற கல்லூரிகளுக்கான அங்கீகாரம் என்பது 2012 முன் கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்பதால் அவர்களுக்கு தடையில்லா சான்று பெற வேண்டும் என்ற சட்டத்திலிருந்து விலக்கு தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. (Since NBA has started functioning only from 2012, it is possible that some engineers are currently working in Kuwait who acquired degrees prior to setting up of NBA. It is requested that the qualification of such engineers may not be questioned at this later stage,” the letter states).

மேலும் மனித வள அமைச்சகத்தின் அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது, இந்திய அரசின் தரம்வாய்ந்த பல கல்வியகங்களை உருவாக்கியுள்ளது. இங்கு பயிலும் மாணவர்கள் பல கடுமையான போட்டிப் பரிசோதனைகளின் அடிப்படையிலேயே சேர்க்கை நடத்தி அவர்களை மிகச் சிறந்த பொறியியலாளர்களாக உருவாக்குகின்றது.  (The government clarified that Parliament has created a few premier institutions of excellence in engineering which are producing high-quality engineers after admitting students through a very competitive examination)

இத்தகைய கல்வி நிறுவனங்கள் மிகச் சிறந்த கல்வியாளர்களை கொண்ட சுய அங்கீகார முறையும், தேர்வு முறையையும் பின்பற்றுகின்றன என விளக்கமளித்துள்ளார் மனிதவள அமைச்சகத்தின் உயர்கல்விச் செயலாளர் ஆர். சுப்ரமணியம்.(These institutes have their own system of accreditation through External Peer Group reviews. Government of India considers that the students graduating from these institutions have qualified duly accredited courses,” R Subrahmanyam, higher education secretary in the HRD ministry, said in the letter).

IIT, NIT போன்ற கல்வி நிறுவனங்கள் மத்திய அரசால் நிர்வகிக்கப்பட்டாலும் இதில் பயில்வோரிலும் , பயிற்றுவிப்போரிலும் பிராமணர்களே மிகைத்துள்ளனர். மத்திய அரசு அனைத்து கல்வி நிறுவனங்களின் எஞ்சினியர்களுக்காகவும் குரல் கொடுத்திருந்தால் பாராட்டலாம் ஆனால் இங்கும் 'வேண்டியவர்கள்' என பார்த்து குரல் கொடுத்திருப்பது ஏற்கத்தக்கதல்ல.

Source: Hindustan Times / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...