Pages

Monday, April 9, 2018

பட்டுக்கோட்டையில் மு.க ஸ்டாலின் நடைபயணம் ~ தோழமை கட்சியினர் வரவேற்பு !

பட்டுக்கோட்டை, ஏப்.09
காவிரி உரிமை மீட்புப் பயணம் மேற்கொண்டுள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பட்டுக்கோட்டை ரயில் நிலைய சாலையிலுள்ள திரையரங்கம் அருகிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 5.45 மணிக்கு தனது நடைப்பயணத்தைத் தொடங்கினார்.

பட்டுக்கோட்டை பேருந்து நிலையம், மணிக்கூண்டு, பெரிய தெரு வழியாக எதிர்க்கட்சித் தலைவர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் புடைசூழ மாலை 6 மணிக்கு தலைமை அஞ்சலகம் அருகிலுள்ள அம்பேத்கர் சிலையை வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு பட்டுக்கோட்டை தொகுதிக்குள்பட்ட சூரப்பள்ளம், செண்டங்காடு, திட்டக்குடி, செம்பாளூர் வழியாக ஆலத்தூர் சென்றார். அங்குள்ள திரையரங்கத்திலிருந்து கடை வீதி அண்ணா சிலை வரை நடந்து சென்ற ஸ்டாலின் அங்கிருந்து காரில் புறப்பட்டு இரவு ஒரத்தநாடு தொகுதியைச் சேர்ந்த கிராமங்களில் தனது பயணத்தைத் தொடர்ந்தார். அவருடன் முன்னாள் எம்பிக்கள் டி.ஆர்.பாலு, ஏ.கே.எஸ்.விஜயன், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், எம்.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் சென்றனர்.

மு.க ஸ்டாலினுக்கு தோழமை கட்சிகள் வரவேற்பு...
திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளான காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இடதுசாரி கட்சியினர்,  விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக வருகை தந்து மு.க ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...