Pages

Sunday, April 8, 2018

வீட்டுப் பணிப்பெண்ணுக்கு சொந்த செலவில் திருமணம் நடத்தி வைத்த பஹ்ரைன் குடும்பம்!

அதிரை நியூஸ்: ஏப்.08
வீட்டுப் பணிபெண்ணுக்கு தங்களின் சொந்த செலவில் திருமணம் நடத்தி வைத்த பஹ்ரைன் குடும்பம்

மனிதாபிமானமிக்க என்பதைவிட விசுவாசமிக்கதொரு பஹ்ரைனிய குடும்பம் ஒன்று தங்கள் வீட்டில் பணிப்பெண்ணாக கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வரும் வெளிநாட்டு பெண் ஒருவருக்கு தங்களுடைய முழுச்செலவில் முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.

பஹ்ரைன் பிரஜை ஒருவர் அந்தப் பணிப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்ததையடுத்து அந்தப் பணிப்பெண் தான் பணிபுரியும் குடும்பத்தினரின் அனுமதியை மட்டுமே எதிர்நோக்கியிருந்தார் ஆனால் அக்குடும்பத்தினரோ அனுமதியையும் வழங்கி மணப்பெண் தரப்பின் முழுச்செலவுகளையும் ஏற்று திருமணத்தையும் முன்னின்று நடத்தி வைத்துள்ளனர்.

முன்னதாக அப்பணிப்பெண்ணின் பஹ்ரைன் குடும்பத்தினர் தங்களின் உறவினர்களையும் அப்பணிப்பெண்ணின் நண்பர்களையும் திருமண நிகழ்வுகளுக்கு அழைத்திருந்ததுடன் அவர்களுக்கு விருந்துபச்சாரமும் செய்து கண்ணியப்படுத்தினர். (வழமைபோல் இதற்கு மேல் எந்தத் தகவலையோ அல்லது புகைப்படங்களையோ வெளியிடவில்லை)

பொதுவாக வளைகுடா நாடுகளில் பணியாற்றும் வீட்டுப் பணியாளர்கள் படும் துயரங்கள் சில வெளியாகும் அதேவேளையில் இதுபோல் மனிதாபிமானமிக்க செயல்களும் வெளிவரத்தான் செய்கின்றன.

குறிப்பாக, பஹ்ரைனின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷேக் காலித் பின் அஹ்மது அல் கலீபா அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு 60 ஆண்டுகளுக்கு (அதாவது 1959 ஆம் ஆண்டு முதல்) முன் தன்னையும் தன் உடன்பிறந்தார்களையும் தூக்கி வளர்த்த கேரளாவைச் சேர்ந்த பணிப்பெண்ணின் வீட்டிற்கு நேரில் விஜயம் செய்து கர்மைன் மத்தியாஸ் என்ற அப்பணிப்பெண்ணுடன் தாயைப் போற்றுவது போன்று நன்றியுடன் அளவளாவியது டிவிட்டரில் தெறித்ததை அறிந்திருப்பீர்கள்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...