Pages

Tuesday, April 17, 2018

ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹூசைனின் மண்ணறை எங்கே? மர்மம் நீடிப்பு!

அதிரை நியூஸ்: ஏப்.17
ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹூசைனின் மண்ணறை எங்கே? மர்மம் நீடிக்கின்றது.

ஈராக்கின் முன்னாள் அதிபராக இருந்த இரும்பு மனிதர் சதாம் ஹூசைன் ஈராக்கிய ஷியாக்களின் துணையோடு அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷினால் உலக முஸ்லீம்கள் ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாடி தினமான 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி அதிகாலையில் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார்.

சதாம் ஹூசைன் தூக்கிலிடபட்டு கொல்லப்பட்ட பின் அவரது உடலை அவரது சொந்த கிராமமான அல் அவ்ஜா என்ற இடத்தில் உடனடியாக அடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவரது குடும்ப வம்சாவளி உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஐஎஸ்ஐஎஸ் என்று தங்களை அழைத்துக் கொண்ட தீவிரவாதிகள் அந்த நினைவில்லத்தின் மீது பதுங்கியிருப்பதாக கூறி ஈராக்கிய (அமெரிக்கா) படைகள் இந்த சமாதியை குண்டுவீசி அழித்ததை தொடர்ந்து ஈராக்கில் சுமார் 25 ஆண்டுகாலம் இரும்பு மனிதராக வலம் வந்த சதாம் ஹூசைனின் உடல் எங்கிருக்கின்றது என தெரியாமலேயே அவரது கபுர் இருந்த நினைவகம் சிதைக்கப்பட்டு வெறும் கற்குவியலாகவும், தொங்கும் கம்பிகளாகவும், வெறும் கட்டாந்தரையாகவும் காட்சியளிக்கின்றது.

உலா வரும் சர்ச்சைகள்:
ஷேக் மனாஃப் அல் நிதா என்பவர் சதாம் ஹூசைனின் மண்ணறை திறக்கப்பட்டு அவரது உடற்பாகங்கள் குண்டுவைத்து சிதறடிக்கப்பட்டதாக நம்புவதாக கூறுகிறார்.

ஹாஷித் அல் ஷாபி எனும் ஷியா கூட்டணிப்படையின் பாதுகாப்பு அதிகாரி ஜாஃபர் அல் கராவி என்பவர், உடல் இன்னும் அங்கேயே தான் உள்ளது எனக்கூறினார். அதே சமயம் அவர் படையிலுள்ளவர்கள், வெளிநாட்டில் தஞ்சமடைந்து வாழும் சதாமிம் மகள் ஹாலா என்பவர் ஒரு தனியார் விமானத்தில் வந்து தந்தையின் உடலை ஜோர்டான் நாட்டிற்கு எடுத்து சென்றுவிட்டதாக கிசுகிசுக்கின்றனர்.

சதாம் காலத்தில் மாணவராக இருந்து தற்போது பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக பணியாற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர், ஹாலா ஒருபோதும் ஈராக்கிற்குள் வந்திருக்க முடியாது. அவர்கள் (குடும்பத்தினர்) தான் எங்கோ ஒரு ரகசிய இடத்திற்கு இடமாற்றி ஒழித்து வைத்துள்ளனர் என்றும், சதாமின் குடும்ப அங்கத்தினர்களுக்கு மட்டுமே அந்த ரகசியம் தெரிந்திருக்கும் எனக்கூறினார்.

அபூ சமீர் போன்ற பக்தாத் நகரவாசிகளோ, சதாம் உயிரிழந்திருக்கவே வாய்ப்பில்லை, அவர் எங்கோ வாழ்ந்து கொண்டுள்ளார். சதாமால் உலாவ விடப்பட்ட அவரது உருவ ஒற்றுமையுடைய ஒருவர் தான் தூக்கிலிடப்பட்டிருக்கலாம் என தாம் நம்புவதாக குண்டைத் தூக்கிப் போட்டனர்.

ஒரு காலத்தில் சதாம் ஆட்சியின் கீழ் கம்பீரமாக இருந்த ஈராக்கும் சரி அவரது கல்லறையும் சரி துகள் துகள்களாக சரிந்தது தான் அமெரிக்காவும் அதன் ஈராக்கிய ஷியா கூட்டுப்படைகளும் ஈராக்கிய மக்களுக்கு வழங்கிய ஜனநாயகம்.

தூக்கிலிட்டவர்கள் முகத்தை மூடிக்கொண்டும், தூக்கிலிடப்பட்ட சதாம் முகத்தை திறந்து கொண்டும் வரலாற்றை மாற்றி எழுதிய ஒரு மாவீரனின் கல்லறை காணாமல் போனது மிக ஆச்சரியமே!

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...