Pages

Friday, April 6, 2018

அதிராம்பட்டினத்தில் PFI சார்பில் 2 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்!

அதிராம்பட்டினம், ஏப்.06
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் 'அவர்கள் நம்மை நோக்கி வரும் முன்' என்ற தலைப்பில் தேசிய அளவிலான பிரச்சாரம் கடந்த மார்ச் 20 ல் தொடங்கி வரும் ஏப்.15 வரை தேசம் முழுவதும் நடைபெறுகிறது. இதில், தெருமுனைப் பிரசாரக் கூட்டங்கள், பொதுகூட்டங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக,  தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம், மேலத்தெரு சானவயல் ஆகிய 2 இடங்களில்  தெருமுனைப்பிரசாரக் கூட்டங்கள் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அவ்வமைப்பின் அதிரை பேரூர் செயற்குழு உறுப்பினர் சலீம் தலைமை வகித்தார். கூட்டத்தில், அவ்வமைப்பின், தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் ஏ.ஹாஜா அலாவுதீன், வழக்குரைஞர் நிஜாமுதீன் ஆகியோர் பிரச்சார உரை நிகழ்த்தினர்.

இதில், ஜார்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் தடை செய்தது ஏன்?, மாட்டு அரசியல், பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கை உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...