Pages

Saturday, April 7, 2018

துபையில் TIYA புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு (படங்கள்)

அதிரை நியூஸ்: ஏப்.07
அமீரக தாஜுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்கம் (TIYA) அமைப்பின் சார்பில், புதிய நிர்வாகிகள் தேர்வு துபையில் (என்.சேக்காதி  இல்லத்தில்) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அமீரகத் தலைவர் என். முகமது மாலிக் தலைமை வகித்தார். அமீரகம் TIYA நிர்வாகிகள், முஹல்லாவாசிகள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தை, எஸ். மீரா முகைதீன் கிராத் ஓதி தொடங்கி வைத்து, பின்னர், நிதி நிலை அறிக்கையை சமர்பித்தார். இதையடுத்து, கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2018 மார்ச் வரை TIYA அமைப்பு ஆற்றிய சேவை, செயல்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் பற்றி எடுத்துரைக்கப்பட்டன. மேலும், துடிப்புடன் பணியாற்றிய அமீரகம் மற்றும் அதிரை TIYA நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில், அமீரகம் TIYA அமைப்பின் தலைவராக N.M.S.சேக்பரீது, துணைத் தலைவராக S. நவாஸ், செயலராக M. சாகுல் ஹமது, துணைச் செயலர்: N.K.S. நூருதீன், பொருளாளராக N. அல்அமீன், இணைச் பொருளாளராக M. முகமது அலி, இணை செயலர்களாக M.முகமது இல்ஸாஸ், M.முகமது சலீம் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில், அமீரக வாழ் மஹல்லாவாசிகள் பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...