Pages

Sunday, May 6, 2018

கத்தாரில் புனித ரமலானை முன்னிட்டு இன்று (மே 06) முதல் மளிகை சாமான்கள் மீது விலை குறைப்பு!

அதிரை நியூஸ்: மே 06
புனித ரமலான் மாதம் இன்னும் 11 நாட்களில் துவங்கவுள்ளதை அடுத்து சுமார் 500 வகையான அன்றாடத் உணவுத் தேவைக்கு பயன்படும் மளிகை மற்றும் உணவுப் பொருட்களின் விலையை குறைத்து அறிவித்துள்ளது கத்தார் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்திற்கான அமைச்சகம். இந்த அதிரடி விலை குறைப்பு இன்று (ஞாயிறு 06.05.2018) முதல் துவங்கி ரமலான் மாதம் இறுதி வரை அமலில் இருக்கும்.

இந்த விலை குறைப்பு அறிவிப்பின் மூலம் பால், இறைச்சி, தேன், பிஸ்கட்டுகள், மாவு, சீனி, அரிசி, பாஸ்தா, சமையல் எண்ணெய் போன்ற முக்கிய பொருட்களின் விலை குறைந்துள்ளது. விலை குறைக்கப்பட்ட பொருட்கள் பற்றி முழு விபரங்கள் அமைச்சகத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன் சமூக வலைத்தளங்களின் வழியாகவும் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் கத்தார் நாட்டு பிரஜைகளுக்கு மலிவு விலையில் வழங்கப்பட்டு வரும் ரேசன் பொருட்களான பால் மற்றும் சக்கரையின் அளவும் புனித ரமலானுக்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை அமைச்சகத்தின் உத்தரவை மீறி சட்ட விரோத காரியங்களில் ஈடுபடும் வர்த்தக நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கைகள் பாயும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Sources: Qatar Tribune / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...