Pages

Tuesday, May 1, 2018

துபை விமான நிலையத்தில் 10 நொடிகளில் இமிக்கிரேசன் கிளியரன்ஸ் திட்டம்!

அதிரை நியூஸ்: மே 01
துபை விமான நிலைய குடிநுழைவுத் துறை பணிகளை 10 நொடிகளுக்கும் முடிக்கும் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. இதற்கு ‘Next Generation Borders’ system' என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு பயணியும் சுமார் 3 நிமிடங்கள் வரை இமிக்கிரேசன் கவுண்டரில் ஸ்டாம்பிங் பணிகளுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

துபை இமிக்கிரேசன் துறையின் புதிய திட்டப்படி, முன்அனுமதி (Pre-approval system) பெற்று பயணிக்கும் பயணிகளின் விபரங்கள் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் டிக்கெட் வாங்கும்போதே பயணி குறித்த விபரங்கள் பயணம் செய்யும் 48 மணிநேரத்திற்கு முன்பாக சேகரிக்கப்பட்டு பயணி விமானத்தில் ஏறும் சமயத்தில் துபை இமிக்கிரேசனுக்கு (The General Directorate of Residency and Foreigners Affairs - GDRFA) அனுப்பப்படும்.

சரிபார்க்கப்பட்ட இந்த விபரங்களை கொண்டு பயணி துபை இமிக்கிரேசன் கவுண்டருக்கு வரும்போது 10 நொடிக்குள் பாஸ்போர்டில் ஸ்டாம்பிங் செய்யப்பட்டு அனுப்பப்படுவார். இந்த ஆவண சரிபார்ப்பு பணிகளுக்காக பாஸ்போர்ட் கண்ட்ரோல் ரூமில் 65 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த புதிய முன்அனுமதி திட்டம் ( pre-approval system) ஏற்கனவே துபை விமான நிலையம் டெர்மினல் 3ல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வருட இறுதிக்குள் படிப்படியாக டெர்மினல் 1, 2 மற்றும் மக்தூம் விமான நிலையம் ஆகியவற்றிலும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது புறப்பாடு (Departure), வருகை (Arrival) என இருவழிகளிலும் துபை இமிக்கிரேசனில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த புதிய திட்டத்தின்படி 48 மணிநேரத்திற்கு முன்னிருந்து கடைசி நிமிடங்களில் எடுக்கும் டிக்கெட் வரைக்கும் இந்த முன்அனுமதி திட்டம் பொருந்தும். துபை விமான நிலையங்களில் பயணிகளின் வருகை சுமார் 7 முதல் 9 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்புதிய திட்டம் மிக பயனுள்ளதாக அமையும் என துபை இமிக்கிரேசன் கருத்து தெரிவித்துள்ளது.

தற்போது எமிரேட்ஸ் ஏர்லைன்ஸூடன் மட்டும் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டு தகவல்கள் பெறப்படுவது விரைவில் பிற விமான நிறுவனங்களுக்கும் விரிவு செய்யப்படும்.

துபை விமான நிலையங்களில் 1,600 பாஸ்போர்ட் கண்ட்ரோல் ஊழியர்கள் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் ஆண்டிற்கு சுமார் 55,000 பயணிகளை கையாளுகின்ற நிலையில் உலகின் பிற நாடுகளின் சராசரியோ 17,000 மட்டுமே. கடந்த வருடம் ஒரு துபை இமிக்கிரேசன் அதிகாரி சுமார் 133,000 பயணிகளை கையாண்டு சாதனை நிகழ்த்தியிருந்தார்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...