Pages

Sunday, May 13, 2018

நிலாவில் 10 ஏக்கர் நிலம் வாங்கியுள்ள முதலாவது மலையாளி!

அதிரை நியூஸ்: மே 13
நீல் ஆம்ஸ்ட்ராங் முதன்முதலில் நிலவில் காலடி எடுத்து வைத்த போது அங்கு அவருக்கு முன்பே மலையாளி ஒருவர் நிலாவில் டீக்கடை வைத்திருந்தாராம் என ஒரு பிரசித்தி பெற்ற ஜோக் ஒன்று உள்ளது. தற்போது ஆம்ஸ்ட்ராங் இறங்கியதே சர்ச்சையாகியுள்ள நிலையில் இந்த ஜோக் உண்மையாகிவிடுமோ?

அமீரகம் அஜ்மானில் தொழில் செய்து வரும் மணிகண்டன் மெலோத் என்ற மலையாளி உண்மையிலேயே நிலவில் 10 ஏக்கர் நிலம் வாங்கி வைத்துள்ளார் அதுவும் 2008 ஆம் ஆண்டிலேயே வாங்கியுள்ளார். His property - titled 'Area F-4, Quadrant Charlie' - is a 10-acre plot of land on the 'Lighted lunar surface'. The property is located three squares south and eight squares east of the extreme Northwest corner of the recognised lunar chart.

 நிலவில் நிலம் விற்பதற்கும் ஒரு இணையதளம் (moonestates.com) அமெரிக்காவில் இயங்கி வருவதுடன் இவர்களிடம் முன்னாள் அமெரிக்கா அதிபர்களான H.W. புஷ், ஜிம்மி கார்டர், திரைப்பட நடிகர்களான டாம் குரூயிஸ், ஜான் டிரவோல்டா, நிக்கோல் கிட்மன் போன்றோரும் நிலவில் நிலம் வாங்கி வைத்துள்ளனராம்.

1980 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா மற்றும் ரஷ்யா நாடுகளின் அங்கீகாரம் பெற்று அமெரிக்கரான டென்னிஸ் எம். ஹோப் என்பவர் நிலாவின் தூதராக பூமியில் செயல்பட்டு வருகின்றார். இவர் நிலவில் நிலம் விற்கும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார். (In 1980, the Lunar Embassy was born. Moonestates.com Ltd is authorised by the Lunar Embassy for the sale of extraterrestrial property, and all purchases are registered on their central database)

நிலவில் நிலம் இன்றைய ரேட் ஒரு ஏக்கர் 37.50 டாலர்கள் (சுமார் 137.50 திர்ஹம்) மட்டுமே. பூமியில் குடியுரிமை பெற்ற யாவரும் நிலவிலும் குடியுரிமை பெற்று இரட்டை குடிமகன்களாக இருக்கவும் அனுமதிக்கிறது நில விற்பனை பத்திரங்கள். Ownership of land on the moon also gives its owner a copy of the 'Lunar Constitution Bill of Rights', which clearly declares "a resolve to hold a dual citizenship with mother planet Earth and the moon".

இக்கும்பல் இத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. இதுவரை நிலாவில் (Moon) 611 மில்லியன் ஏக்கர்கள், செவ்வாய் (Mars) கிரகத்தில் 325 ஏக்கர்கள், புதன் (Mercury) மற்றும் சுக்கிரன் (Venus) ஆகிய இரு கிரகங்களிலும் 125 மில்லியன் ஏக்கர்களை விற்றுள்ளனர். காரியக்கார பைத்தியங்கள் பலவிதம் இவர்கள் அதில் ஒருவிதம்.

இதுவரை வெளியிடப்பட்டுள்ள நிலவின் வரைபடங்களின் அடிப்படையில் பக்கவாக ஏரியா பெயர் சூட்டப்பட்டு, லே அவுட் குறிக்கப்பட்டு விற்கப்பட்டு வரும் இந்த நிலங்களில் ஒன்றை விளையாட்டாக வாங்கியுள்ள நம்ம மலையாளி இது எந்தளவு சாத்தியம் எனத் தெரியவில்லை, ஒருவேளை சந்திரனுக்கு சுற்றுலாக்கள் சாத்தியமானால் என்னுடைய நிலத்தை போய் பார்க்க வாய்ப்பு ஏற்படலாம், இன்னும் தொழிற்நுட்பங்கள் வளர்ச்சியடைவதை பொறுத்து பின்னாளில் வருவாய் தரக்கூடிய ஒன்றாகக்கூட மாறலாம், இவ்வளவு ஏன் நிலவில் டீக்கடை திறக்கும் முதல் மலையாளி நானாகக்கூட இருக்கலாம் என சிரிக்கிறார் மணிகண்டன் மெலோத்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...