Pages

Sunday, May 6, 2018

உலகின் அழகிய 10 மிதக்கும் மஸ்ஜித் (பள்ளிவாசல்) படங்கள்!

அதிரை நியூஸ்: மே 06
உலகின் அழகிய 10 மிதக்கும் மஸ்ஜிதுகளின் படங்கள் ~ மஸ்ஜிதுகள் எனப்படும் முஸ்லீம்களின் பள்ளிவாசல்கள்

மஸ்ஜிதுகள் தொழுகை கூடங்களாக, சமூக மையங்களாக, குர்ஆனை போதிக்கும் இடங்களாக திகழ்கின்றன. வரலாற்றில் அவை இறையியல், இலக்கியம், இயற்பியல், வேதியியல் போன்றவற்றை போதிக்கும் கல்விக்கூடங்களாகவும் இயங்கியுள்ளது.

ஆரம்பத்தில் மினாரா (Minaret) மற்றும் மாடங்கள் (Domes) பள்ளிகளின் அழகியல் வடிவங்களாக திகழ்ந்தன, இவற்றுடன் பின்பு இணைத்து உருவாக்கப்பட்ட நீர் தடாகங்களும், நீரூற்றுக்களும் தவிர்க்க இயலா அழகியல் அம்சங்களாக மாறின. இத்தகைய நீர் சம்பந்தப்பட்ட பாரம்பரிய இஸ்லாமிய கட்டிடக் கலைவடிவங்கள் ஸ்பெயின், ஆப்பரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா மற்றும் தூர கிழக்கு நாடுகளில் கட்டப்பட்ட மஸ்ஜிதுகளில் குடிகொண்டிருந்தன.

பண்டைய மஸ்ஜிதுகளும் நீரும் ஒன்றிணைந்த அழகியலின் நீட்சியாக நீரில் மிதக்கும் (Floating Masjid) வடிவில் உருவாக்கப்பட்டுள்ள 10 அழகிய நவீன மஸ்ஜிதுகள் குறித்து சிறுகுறிப்புக்களை பார்ப்போம்.

1. சுல்தான் ஒமர் அலி சைபுதீன் மஸ்ஜிது – புருணை
1. Sultan Omar Ali Saifuddin Mosque, Brunei
புருணை நாட்டின் தலைநகர் பண்டார் செரி பகவான் நகரின் (Bandar Seri Bhagavan) மையத்தில் கட்டப்பட்டுள்ள இந்த மஸ்ஜித் புருணையின் 28வது சுல்தானின் நினைவாக பெயர் சூட்டப்பட்டது. இதன் வானுயர்ந்த தங்க மாடத்தை நகரின் எங்கிருந்தும் காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 1958 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்த மஸ்ஜித் தென்கிழக்கு ஆசியாவில் ஓர் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும் திகழ்கின்றது.

2. இரண்டாம் ஹஸன் மஸ்ஜித் - மொரொக்கோ
2. Hassan II Mosque, Morocco
இரண்டாம் ஹஸன் மஸ்ஜித் மொரொக்கோ நாட்டிலேயே மிகப்பெரியதும், உலகின் பெரிய மஸ்ஜிதுகளில் ஒன்றாகவும் திகழ்கின்றது. காஸபிளங்கா (Casablanca) நகரில் 1993 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இதில் ஒரே நேரத்தில் சுமார் 105,000 பேர் தொழலாம். 210 மீட்டர் உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய மினாராவும் இதில் தான் உள்ளது.

முழுக்க முழுக்க மொரொக்கோ நாட்டில் கிடைக்கும் கட்டிட மூலப்பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த மஸ்ஜிதின் ஒரு பகுதி தரைத்தளம் கடலுக்கு மேல் கண்ணாடியால் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, தொழும் போது நாம் தண்ணீருக்கு மேல் நின்று தொழுவது போன்ற பிரம்மையை ஏற்படுத்தும்.

3. கோட்ட கினபாலு சிட்டி மஸ்ஜித் - மலேஷியா
தங்க நிறமும் நீள நிறமும் கலந்து வண்ணம் பூசப்பட்டுள்ள இந்த மஸ்ஜிதின் மாடம் புனித மதினா நகரிலுள்ள 'மஸ்ஜிதுந் நபவி'யை முன்மாதிரியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்பள்ளியைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ள செயற்கை தடாகத்தில் (Man - Made Lagoon) படகு மூலம் சுற்றி பார்க்கலாம். 2000 ஆம் முதல் பாவணைக்கு வந்த இந்த பள்ளியில் ஒரே நேரத்தில் 12,500 பேர் தொழ முடியும்.

4. மலாக்கா நீரிணை (Melaka Straits) மஸ்ஜித் - மலேஷியா
4. Melaka Straits Mosque, Malaysia
கடற்கரை நகரான மலாக்காவில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட செயற்கை தீவில் (Man - Made Island) அரபு மற்றும் மலேஷிய கலப்பு பாணியில் (Blend of Arab & Malay Islamic Architecture) இப்பள்ளி 2006 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. கடலில் அலைகள் எழும் சமயத்தில் கடல் நீரின் மீது இப்பள்ளி மிதப்பது போன்ற தோற்றத்தை தரும்.

5. தஞ்சுங் புங்கா மிதக்கும் மஸ்ஜித் - மலேஷியா
5. Tanjung Bungah Floating   Mosque, Malaysia
பினாங்கு தீவில் உள்ள இந்த பள்ளிவாசலே மலேஷியா நாட்டில் கட்டப்பட்ட முதலாவது கடல் மேல் மிதக்கும் பள்ளிவாசல் (Malaysia's 1st Floating Masjid on Sea) என்பதுடன் பினாங்கு நகரின் முக்கிய சுற்றுலா தளமாகவும் இருந்து வருகிறது. இப்பள்ளியில் ஒரே நேரத்தில் 1,500 பேர் தொழ முடியும்.

6. கிரிஸ்டைல் மஸ்ஜித் - மலேஷியா
6. Crystal Mosque, Malaysia
மலேஷியாவின் பெரிய பள்ளிகளில் ஒன்றான இது கோலா தெரங்கானு (Kuala Terenganu) அருகிலுள்ள வான் மான் தீவில் (Wan Man Island) எழுப்பப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இப்பள்ளியில் சுமார் 1,500 பேர் தொழுகையில் ஈடுபட முடியும். இப்பள்ளியின் வெளிப்புறம் முழுவதும் கண்ணாடி(Glass), எஃகு (Steel) மற்றும் ஸ்படிகம் (Crystal) கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால் அவை நம் கண்களுக்கு விருந்தாய் பிரகாசிக்கின்றன (Sparkles). இப்பள்ளியை சுற்றியுள்ள மினாராக்கள் முழுக்க முழுக்க ஸ்படிகத்தால் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன.

7. புத்ரா மஸ்ஜித் - மலேஷியா
7. Putra Mosque, Malaysia
புத்ராஜெய நகரில் செயற்கை ஏரியின் மீது உருவாக்கப்பட்டுள்ள இந்த பள்ளிவாசலின் மீது இளஞ்சிவப்பு நிற பளிங்கு (Pink Granite) கற்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன. பார்ஸி மற்றும் மலாய் கட்டிட கலவைகளை (Blend of Persian & Malay Architecture) கொண்டு 2009 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இப்பள்ளியில் ஒரே நேரத்தில் 15,000 பேர் தொழலாம்.

8. டெங்கு டெங்கா ஜஹரா மஸ்ஜித் - மலேஷியா
8. Tengku Tengah Zaharah Mosque, Malaysia
கோலா இபை ஆற்றின் (Kuala Ibai River) கரையோரம் அமைந்துள்ள கோலா இபை நீர் தடாகத்தின் (Kuala Ibai Lagoon) மீது எழுப்பப்பட்டுள்ள இந்த அழகிய, சிறிய மஸ்ஜிதில் சுமார் 2,000 பேர் தொழ முடியும். மலேஷியவின் முதல் மிதக்கும் பள்ளியான இது 'மூர் கட்டிடக் கலை' (Moorish Architecture) அடிப்படையில் 1995 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் போது இப்பள்ளி மேலும் அழகுடன் மிளிர்வது சிறப்பு.

9. மஸ்ஜித் அல் ஸலாம் - பூச்சோங் பெர்டானா – மலேஷியா
9. Masjid Al-Salam Puchong Perdana, Malaysia
அமைதி தவழும் நீரின் (Placd Water)  மீது அமைந்துள்ள இந்த தங்க நிற மாடங்களுடைய (Golden Domes) மஸ்ஜித் இதன் கட்டிடக் கலைக்காகவே போற்றப்படுகிறது. 2006 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இப்பள்ளியில் சுமார் 4,000 பேர் தொழலாம்.

10. மஸ்ஜித் அல் ரஹ்மா அல் பாத்திமா ஜஹ்ரா – சவுதி அரேபியா
10. Ar-Rahma Mosque, Saudi Arabia
சவுதி அரேபியவின் ஒரே மிதக்கும் பள்ளியான இது 1985 ஆம் ஆண்டு ஜெத்தா நகரின் செங்கடல் ஓரம் கட்டப்பட்டது. கடலில் அலைகள் அதிகமாகும் போது பள்ளி தண்ணீரில் மிதப்பதை போன்ற உணர்வைத் தரும்.

Sources: StepFeed / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

1 comment:

  1. நம்ம ஊர் செக்கடிப் பள்ளியும் இப்படித்தானே அழகுடன் காட்சியளிக்கின்றது - குளத்தில் தண்ணீர் உள்ள காலங்களில்! நமதூரின் ஏறத்தாழ, எல்லாப் பள்ளிகளும் நீர்நிலைகளை ஒட்டியே இருப்பதால், அவற்றை நீர்நிலைகளுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டு மகிழலாமே? முயற்சி செய்யுங்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...