Pages

Saturday, May 5, 2018

திருக்குர் ஆன் மாநாடு ~ 2 வது நாள் நிகழ்ச்சி (நேரடி ரிப்போர்ட்)

அதிராம்பட்டினம், மே 05
தஞ்சாவூர் மாவட்டம், அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் வெள்ளிவிழா ஆண்டின், 15 வது திருக்குர்ஆன் மாநாடு புதுமனைத்தெரு, முஹையித்தீன் ஜும்ஆ பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

விழாவுக்கு, கடற்கரைத்தெரு மவ்லவி தாஜுதீன் தலைமை வகித்தார். திருக்குர் ஆன் மாநாடு குழுத்தலைவர் ஹாஜி எம்.எஸ் ஷிஹாபுதீன், தாஜுல் இஸ்லாம் சங்கத் தலைவர் எம்.எம்.எஸ் சேக் நசுருதீன்,  அதிரை பைத்துல்மால் புரவலர் ஹாஜி எஸ்.எம் அக்பர், கடற்கரைத் தெரு ஜும்ஆ மஸ்ஜித் முஹல்லா நிர்வாகக் கமிட்டித் தலைவர் ஏ.எஸ் .அகமது அலி, தரகர் தெரு முகைதீன் ஜும்ஆ பள்ளி நிர்வாகக் கமிட்டித் தலைவர் ஹாஜி ஏ. நைனா முஹம்மது (ஆஃப்ரின்), கீழத்தெரு அல் மதரஸத்துல் நூருல் முஹம்மதியா சங்கத் தலைவர் ஏ.தாஜுதீன், நெசவுதெரு மஆதினுல் ஹஸனாத்தில் இஸ்லாமிய சங்கத் தலைவர் ஏ.முகமது முகைதீன், ஆதம் நகர் மஸ்ஜிதுர் ரஹ்மான் நிர்வாகக் கமிட்டித் தலைவர் எம்.ஒய்  அஹமது ஜலாலுதீன், புதுத்தெரு மிஸ்கீன் சாஹிப் பள்ளி நிர்வாகக் கமிட்டித் தலைவர் இஸ்ஹாக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், சென்னை மந்தவெளி ஜாமிஆ மஸ்ஜித் தலைமை இமாம் மவ்லவி கே.எம் முஹம்மது இலியாஸ் ரியாஜி, “அல்குர்ஆனும் அறிவியல் உண்மைகளும்” என்ற தலைப்பிலும், நாகர்கோவில் கலாச்சாரப்பள்ளி தலைமை இமாம் மவ்லவி என்.ஏ ஷவ்கத் அலி உஸ்மானி, “மாமறை போற்றும் மனித நேயம்” என்ற தலைப்பிலும், வேலூர் ஜாமிஆ அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக்கல்லூரி, பேராசிரியர் மவ்லவி எம்.அப்துல் ஹமீது ஃபாஜில் பாகவி, "உலக அமைதிக்கு வான்மறை கூறும் வழிமுறைகள்” என்ற தலைப்பிலும் சிறப்புரை வழங்கினர்.

விழாவையொட்டி, வினாடி-வினா, பேச்சுப்போட்டி, குர்ஆன் சூராக்கள் மனனம், கிராத் உள்ளிட்ட இஸ்லாமிய மார்க்க அறிவுத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 3 வயது, 7 வயது, 10 வயது, 15 வயது, 20 வயது ஆகிய பிரிவுகளில் 1400 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். முதல் நாள் நிகழ்ச்சியில், 7 வயது பிரிவில் வென்ற 335 சிறுவர், சிறுமிகளுக்கு பரிசுகள், பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டன.

முன்னதாக, அதிரை பைத்துல்மால் ஒருங்கிணைப்பாளர் ஓ.கே.எம் சிபகத்துல்லா வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சிகளை காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் எம்.ஏ முகமது அப்துல் காதர் தொகுத்து வழங்கினர். முடிவில், அதிரை பைத்துல்மால் துணைப் பொருளாளர் ஏ.முகமது முகைதீன் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில், 1500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை அதிரை பைத்துல்மால் தலைவர் பேராசிரியர் எஸ்.பர்கத், செயலர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன், துணைத் தலைவர் வழக்குரைஞர் ஏ.முனாப் மற்றும் நிர்வாகிகள், மாநாட்டுக் குழுவினர் செய்து வருகின்றனர். நேற்று வெள்ளிக்கிழமை தொடங்கிய மாநாடு நாளை ஞாயிற்றுக்கிழமை இரவுடன் நிறைவடைகிறது.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...