Pages

Wednesday, May 23, 2018

பொய் வழக்கில் 20 ஆண்டுகள் சிறையில் வாழ்வை இழந்த பெண் விடுதலை!

20 ஆண்டுகளுக்குப் பின் பெற்ற விடுதலையால் கண்ணீர் ததும்பும் அஸ்மா
அதிரை நியூஸ்: மே 23
ஆண்டான் அடிமை, இருப்பவன் இல்லாதவன், வேண்டியவன் வேண்டாதவன், தன் இனம் இன்ன பிறர் என தரம்பிரித்து நீதி என்ற பெயரில் வழங்கப்படும் அநீதி உலகெங்கும் வியாபித்துள்ளது. அவ்வாறான ஒரு அநீதியான தீர்ப்பால் 20 ஆண்டுகளை சிறையில் வாழ்வைத் தொலைத்த ஒரு பாகிஸ்தானிய இளம்பெண் ஒருவர் கடைசியாக குற்றமற்றவர் என பாகிஸ்கான் சுப்ரீம் கோர்ட்டால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் 1998 ஆம் ஆண்டு அஸ்மா அவர்கள் இளம் பெண்ணாக இருக்கும் போது இவரது வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் இவரது பெற்றோரையும் ஒரே தம்பியையும் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டனர். இந்த கொலை வழக்கில் போலீஸாரால் சந்தேகத்தின் பெயரில் இவரும் இவருக்கு அப்போது பேசி வைக்கப்பட்டிருந்த மாப்பிள்ளையும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டு தீர்ப்பு 12 நாளிலேயே குற்றவாளி என வழங்கப்பட்டது, போலீஸார் அந்தளவுக்கு வழக்கை ஜோடித்துள்ளனர்.

பின்பு தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்தார் அஸ்மா, ஆமை வேகத்தில் சுமார் 19.5 ஆண்டுகள் நடத்தப்பட்ட வழக்கின் இறுதியில் இவர் மீது குற்றம் சுமத்த போதிய ஆதராமில்லை என கூறி தனது 36 ஆவது வயதில் விடுதலையாகியுள்ளார். சிறைக்குள் தான் நிரபராதி என அரற்றியது யார் காதிலும் விழாததுடன் அவரது தாய்மாமன் மட்டும் இந்த 20 ஆண்டுகளில் ஒரேயொரு முறையே சிறைக்கு சென்று சந்தித்துள்ளார். பெருநாட்கள் வரும் போதெல்லாம் கண்ணீர் மட்டுமே அவருக்கு துணையிருந்துள்ளது.

ஒருவழியாக ஒரு வழியாக 20 ஆண்டு கண்ணீர் நிரம்பிய சிறை வாழ்க்கைக்குப் பின் விடுதலை அடைந்தாலும் அநியாயமாக இழந்துவிட்ட 20 ஆண்டுகளை இனி திரும்பத்தருவர் யாருமில்லை என்பதுடன் இந்த அப்பாவி பெண்ணுக்கு சல்லி காசைக்கூட நட்டஈடாக தர தயாரில்லை வெளியிலும் ஆதரிப்பார் யாருமில்லாததால் இனி அவர் வாழ்க்கையை பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்ப செய்ய வேண்டியுள்ளது.

இவர் விடுதலையை எதிர்த்தும், கொலைகாரி என்றும் அக்கம்பக்கமும் இவர் காதுபடவே பேசுகின்றது என்றாலும் தன்னைப்போல் சிறையிலுள்ள அப்பாவி பெண்களின் விடுதலைக்காக சமூக     தொண்டு இயக்கம் ஒன்றை ஆரம்பிக்க உறுதிபூண்டுள்ளார், இதற்கு துணை நிற்க அவரது வக்கீலும் முன்வந்துள்ளார்.

20 ஆண்டுகள் கண்ணீர் நிறைந்த சிறை வாழ்க்கையில் என்ன செய்தார்! தன்னுடைய சிறை தோழிகளை கொண்டு "குடும்பம்" எனும் கூட்டமைப்பை அமைத்து வெளியிலுள்ள குடும்பங்களால் கைவிடப்பட்ட சிறைவாசி பெண்கள் மற்றும் ஏழை சிறைவாசி பெண்களின் வழக்கிற்கு உதவியும் ஆதரவாகவும் இருந்து வந்துள்ளார். விடுதலையான நிலையில் தன் படிப்பை தொடரவும் தன்னுடைய தேவைகளுக்காக வேலை ஒன்றை தேடிக் கொள்வதை யும் விரும்புகிறார்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 
20 ஆண்டுகளுக்கு பின் வெறுமையான வீட்டை கண்டு பதறும் அஸ்மா

20 ஆண்டுகளுக்குப் பின் உணர்ச்சிப் பெருக்குடன் வீட்டின் கதவை முத்தமிடும் அஸ்மா

20 ஆண்டுகளுக்குப் பின் சொந்த வீட்டிற்கு முன் அஸ்மா நவாப்

சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் அஸ்மா நவாப்

பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்

விடுதலையான நிலையில் வக்கீலுடன் வீட்டிற்கு வரும் அஸ்மா

வீட்டிற்கு வரும் வழியில் அஸ்மா

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...