Pages

Tuesday, May 8, 2018

துபையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடாத 2,600 வாகன ஓட்டுனர்களுக்கு பரிசு!

அதிரை நியூஸ்: மே 08
துபையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது அபராதங்களும், கரும்புள்ளிகளும், சிலருக்கு நீதிமன்றங்கள் மூலம் தண்டனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இன்னொருபுறம் போக்குவரத்து குற்றங்களில் எதிலும் ஈடுபடாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு வெண்புள்ளிகளுடன் பல வகையான பரிசுகளையும் வழங்கி கௌரவித்து வருகின்றது துபை போலீஸ்.

2017 ஆம் வருடம் துபையில் மொத்தம் 65,298 வாகன ஓட்டுனர்கள் எத்தகைய போக்குவரத்து விதிமீறல்களிலும் ஈடுபடாமலும், சாலிக் மற்றும் பார்க்கிங் கட்டண விதிமுறைகளை மீறாமலும் இருந்துள்ளனர். இவர்களுக்கு மாதந்தோறும் 2 வெண்புள்ளிகள் வழங்கப்பட்டு வந்தன. இவர்களிலிருந்து கம்ப்யூட்டர் குலுக்கல் மூலம் ஒரு அமெரிக்கரும், ஒரு இமராத்தி பெண்மணியும் தலா ஒரு கார்களை பரிசாக வென்றனர். ஏனையோர்களுக்கு பரிசுகளும், பரிசுக்கூப்பன்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

செல்லுபடியாகும் ஓட்டுனர் உரிமத்துடன் (Valid Driving License) துபையில் சொந்தப் பெயரில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகனமும் இத்திட்டத்தின் கீழ்வரும். வருடம் முழுவதும் மாதம் 2 வெண்புள்ளிகள் என வழங்கப்பட்டு வரும் இந்த வெண்புள்ளிகள் இடையில் ஏதாவது போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டால் முழுமையாக இழக்க நேரிடும். வேறொரு வாகன ஓட்டி உங்களுடைய வாகனத்தை எடுத்துச் சென்று போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டாலும் முழுமையான இழப்பு உங்களுக்குத் தான்.

2012 ஆம் ஆண்டு முதல் துபை போலீஸாரால் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டத்தை 2019 ஆம் ஆண்டு முதல் அமீரகம் முழுவதும் செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...