Pages

Thursday, May 10, 2018

அமீரகத்தில் 55 கி.மீ வேகத்தில் வீசும் புழுதிக்காற்று!

அதிரை நியூஸ்: மே 10
அமீரகம் முழுவதும் இன்று காலை முதல் பலத்த புழுதிக்காற்று வீசிவருவதால் எங்கெங்கும் புகை மண்டலம் போல் காட்சியளிக்கின்றது. இந்த புழுதிக்காற்றால் துபை - ஷார்ஜா, துபை – அபுதாபி நெடுஞ்சாலை போக்குவரத்துக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அமீரகத்தில் கடும் கோடைகாலம் துவங்கியுள்ளதை முன்னறிவிக்கும் முகமாக வீசிவரும் இந்தக்காற்றின் வேகம் மணிக்கு 55 கி.மீ என்பதையும் கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் உள்நாட்டிலும் மலைப்பிரதேசங்களிலும் அதிகம் காணப்படும் என அமீரக வானிலை மையம் அறிவித்துள்ளது. புழுதிக்காற்றைத் தொடர்ந்து நாட்டின் கிழக்குப் பகுதியில் மிகச்சிறியளவில் தூறல் மழை பெய்ய வாய்ப்புண்டு.

அமீரகத்தில் இன்றைய தட்பவெப்பம் கடற்கரை பிரதேசங்களில் 36 முதல் 43 டிகிரி செல்ஷியஸ் வரையும், நாட்டிற்குள் 44 முதல் 47 டிகிரி செல்ஷியஸ் வரையும், இரவு நேரத்தில் 22 முதல் 31 டிகிரி செல்ஷியஸ் வரையும் நிலவும்.

மேலும் காற்றின் ஈரப்பதம் (வெக்கை/இருக்கம்) கடற்கரை மற்றும் நாட்டின் உட்புறங்களில் 55 முதல் 85 சதவிகிதமாகவும், மலைப்பிரதேசங்களில் 30 முதல் 55 சதவிகிதமாகவும் காணப்படுவதுடன் இரவு மற்றும் காலை வேளைகளில் இன்னும் அதிகரிக்கவும் வாய்ப்புண்டு. சனிக்கிழமை முதல் தட்பவெப்பம் மேலும் அதிகரிக்கக்கூடும்.

Sources: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...