Pages

Tuesday, May 1, 2018

சவுதியில் போதை மருந்து கும்பலால் ஏமாற்றப்பட்ட 75 வயது மூதாட்டிக்கு உம்ரா செய்ய அனுமதி!

அதிரை நியூஸ்: மே 01
எகிப்து நாட்டின் டரீன் என்ற கிராமத்தை சேர்ந்தவர் 75 வயது மூதாட்டி அப்தல் சலாம். இவர் உம்ரா எனும் புனித கடமையை நிறைவேற்ற ஆர்வமாய் இருந்ததை அறிந்த போதை மருந்து கடத்தல் கும்பல் ஒன்று அவருடைய முழுச்செலவுகளையும் ஒருவர் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், பிரதிபலனாக அவருடைய கர்ப்பிணி மனைவிக்கு தேவையான துணிமணிகள் கொண்ட ஒரு பையை மட்டும் அவரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என நைச்சியமாக பேசி அம்மூதாட்டியை நம்ப வைத்துள்ளனர்.

சவுதியின் யான்பு விமான நிலையத்தில் வந்திறங்கிய போது அவர் கொண்டு வந்த பையில் 75,000 போதை மாத்திரைகள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்ததால் அம்மூதாட்டியை கைது செய்தனர். சவுதியில் பொதுவாக யாரிடமிருந்து போதைப் பொருள் கைப்பற்றப்படுகிறதோ அவர் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்.

இந்நிலையில் அம்மூதாட்டியின் டரீன் கிராமத்தார் ஒன்று திரண்டு மூதாட்டியை மரண தண்டனையில் இருந்து மீட்கவும், போதை மருந்து கடத்தல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் எகிப்து அரசை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தியதை தொடர்ந்து எகிப்து அரசு தேவையான நடவடிக்கை மேற்கொண்டது. இவரைப் போல் இன்னும் 10 மூதாட்டிகளும் இவ்வாறு ஏமாற்றப்பட்டு பயணத்திற்கு தயாராகி இருந்த செய்திகளும் வெளிவந்தது.

எகிப்து அரசின் தீவிர முயற்சியால் எகிப்து தூதரகத்தின் மூலம் மூதாட்டி குற்றமற்ற அப்பாவி என நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து சவுதி அதிகாரிகள் விடுவிக்க சம்மதித்தனர். மூதாட்டி  அப்தல் சலாம் உம்ரா செய்ய வேண்டும்,  மேலும் மதீனா சென்று மஸ்ஜிதுன் நபவியை தரிசிக்க வேண்டும் என்ற தனது ஹாஜத்தை தெரிவித்ததை மனிதாபிமானத்துடன் ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், அவர் உம்ரா செய்வதற்கான அனுமதியையும், வசதிகளையும் செய்து தந்துள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...