Pages

Thursday, May 10, 2018

துபையில் புனித ரமலான் மாதத்தில் இலவச உணவு வழங்க இதுவரை 76 குளிர்சாதனப் பெட்டிகள் நிறுவல்!

அதிரை நியூஸ்: மே 10
துபையில் புனித ரமலான் மாதத்தின் போது இலவச உணவு வழங்க இதுவரை 76 குளிர்சாதனப் பெட்டிகள் நிறுவப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு துபையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுமையா சையித் என்ற பெண்மணியால் புனித ரமலான் மாதத்தின் போது உணவு தேவையுடைய மக்களுக்கு வழங்குவதற்காக உணவுகளை பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள குளிர்சாதனப் பெட்டிகளில் அக்கம்பக்கத்து வீட்டினர்கள் கொண்டு வைப்பதற்குப் ஏற்ப 'பிரிட்ஜ் மேனேஜர்' எனும் திட்டத்தை ஆரம்பித்தார்.

இத்திட்டம் கடந்த 2017 வருடம் ரமலான் மாதத்தின் போது 170 உணவு குளிர்சாதன பெட்டிகளாக வளர்ந்தது. இந்த வருடம் இதுவரை சுமார் 74 குளிர்சாத பெட்டிகளுக்கான முன் அனுமதி தரப்பட்டுள்ளது, இது இன்னும் உயரும். இந்த சேவையை துபை எமிரேட்டில் துபை அரசின் அனுமதியை பெற்று ரெட் கிரஸன்ட் எனும் சர்வதேச சேவையமைப்பு நடத்தி வருகிறது. அரசு அனுமதி பெறாமல் உணவுக்காக குளிர்சாதன பெட்டிகளை நிறுவ அனுமதியில்லை.

கடந்த வருடம் தொழிலாளர் குடியிருப்பு பகுதிகள் பலவற்றின் அருகே வைக்கப்பட்ட குளிர்சாதன பெட்டிகளில் உணவு பதார்த்தங்கள், பழச்சாறுகள், குடிநீர் போன்றவை வைக்கப்பட்டதால் ஏராளமான தொழிலாளர்கள் பயனடைந்தனர். இத்தகைய குளிர்சாதன பெட்டிகளில் அருகாமையிலுள்ள வீடுகளிலிருந்து உணவுகள் கொண்டு வந்து வைக்கப்படுகின்றன. துபையில் செயல்பட்டு வரும் இந்த வசதி ஷார்ஜா, அபுதாபி போன்ற பிற எமிரேட்டுகளின் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...