Pages

Tuesday, May 1, 2018

புனித ரமலான் மாத அமீரக அரசு அலுவலகங்களின் வேலைநேரம் அறிவிப்பு!

அதிரை நியூஸ்: மே. 01
புனித ரமலான் மாதத்தின் போது அரசு அலுவலகங்களின் வேலைநேரத்தை அறிவித்துள்ளது அமீரக பெடரல் மனிதவளத்துறை (UAE's Federal Authority For Government Human Resources - FAHR) . இவ்வறிவிப்பின்படி காலை 9 மணிமுதல் பகல் 2 மணிவரை என தினமும் 5 மணிநேரம் மட்டுமே இயங்கும்.

இந்த வேலைநேரத்தை அனுசரிப்பதுடன் தாமதமின்றி அலுவலகங்களுக்கு வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணிக்கு வர இயலாத சூழலில் உள்ளவர்கள் மற்றும் அவசரகால விடுப்பு தேவைப்படுவோர் உடனடியாக தங்களின் துறைத் தலைவர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும் என்றும், இதன்வழி துறைத்தலைவர் மாற்று ஏற்பாடுகளை செய்வார் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனியார் துறை ஊழியர்கள் புனித ரமலானின் போது வழமைபோல் காலை 8 மணிமுதல் பகல் 2 மணிவரை பணியாற்ற அறிவுறுத்தப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷிப்ட் முறையில் வேலை செய்பவர்களுக்கும் தினசரி 6 மணிநேரம் மட்டுமே வேலை நேரமாக அமையும்.

Sources: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...