Pages

Saturday, May 12, 2018

சிறப்பிடம் பெற்ற ஆதம் நகர் மக்தப் மதரஸா மாணவர்களுக்கு பரிசளிப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், மே 12
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஆதம் நகர் மஸ்ஜிதுர் அர்ரஹ்மான் பள்ளிவாசல் மக்தப் மதரஸா மாணவர்களுக்கான குர்ஆன் அறிவுத்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளிவாசல் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மஸ்ஜிதுர் ரஹ்மான் நிர்வாகக் கமிட்டித் தலைவர் எம்.ஒய்  அஹமது ஜலாலுதீன் தலைமை வகித்தார். வினாடி-வினா, பேச்சுப்போட்டி, குர்ஆன் சூராக்கள் மனனம், கிராத் உள்ளிட்ட இஸ்லாமிய மார்க்க அறிவுத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளை பள்ளிவாசல் இமாம் மவ்லவி.தவ்பீக், மவ்லவி. நவாஸ் ஆகியோர் வழி நடத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. முடிவில், பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி ஆலோசகர் இ.வாப்பு மரைக்காயர் நன்றி கூறினார்.
 
 
 
 
 
 
 
 

1 comment:

  1. தலையில் தொப்பி போட்டு
    இருந்தால் சிறப்பு க்கு சிறப்பாக இருந்து இருக்கும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...