Pages

Thursday, May 17, 2018

அமீரகத்தில் கேரள கிருஸ்தவர் முஸ்லீம்களுக்காக பள்ளிவாசல் கட்டி அர்ப்பணிப்பு!

அதிரை நியூஸ்: மே 17
அமீரகம், ஃபுஜைராவில் கேரள கிருஸ்தவர் முஸ்லீம்களுக்காக பள்ளிவாசல் கட்டி அர்ப்பணிப்பு

கேரளா மாநிலம், காயம்குளம் என்ற பகுதியை சேர்ந்தவர் ஷாஜி செரியன் என்கிற 49 வயது கிருஸ்தவர், ஃபுஜைராவில் தொழிலதிபராக உள்ளார். அல் ஹாயில் இன்டஸ்ட்ரியல் ஏரியாவில் (Al Hayl Industrial Area) இவர் தனக்கு சொந்தமான ஈஸ்ட் வில்லே ரியல் எஸ்டேட் காம்ப்ளக்ஸ் (East Ville Real Estate complex) எனும் தொழிலாளர் குடியிருப்பில் 1.3 மில்லியன் திர்ஹம் செலவில் தொழுகை பள்ளிவாசல் ஒன்றை தனது சொந்த செலவில் முஸ்லீம் தொழுகையாளிகளுக்காக நிர்மாணித்துள்ளார்.

இவர் தனது தொழிலாளர் குடியிருப்புக்களை ஃபுஜைராவிலுள்ள 53 கம்பெனிகளுக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இங்குள்ள முஸ்லீம் தொழிலாளர்கள் குறைந்தது 20 திர்ஹம் செலவழித்து அருகாமையிலுள்ள பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமைகளில் ஜூம்ஆ தொழ செல்வதை பார்த்த ஷாஜி செரியன் அவர்களுக்காக பள்ளிவாசல் ஒன்றை தனது தொழிலாளர் குடியிருப்பு வளாகத்தில் நிர்மாணித்திட தீர்மானித்து அதற்கான காரியங்களை கடந்த வருடம் துவங்கி இவ்வருட ரமலான் மாதத்தில் துவங்குவதற்கு ஏற்றவாறு பூர்த்தி செய்துள்ளார்.

கிருஸ்தவர் ஒருவர் முஸ்லீம்களுக்கான பள்ளிவாசல் ஒன்றை கட்டிவருவதை அறிந்த இஸ்லாமிய விவகாரங்களுக்கான ஃபுஜைரா அவ்காஃப் (Fujairah Awqaf) இப்பள்ளிக்கு இலவச மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட பல வசதிகளை இலவசமாக செய்து தர முன்வந்தது என்றாலும் பள்ளிக்கான கார்பெட் மற்றும் ஒலி பெருக்கி வசதிகளை மட்டுமே ஏற்றுக் கொண்டுள்ளார். அதேபோல் பொதுமக்கள் பலரும் பணமாக, கட்டுமான பொருட்களாக, பெயிண்டாக நன்கொடைகள் தர முன்வந்தபோதும் அன்புடன் மறுத்துவிட்டார்.

மரியம், ஈஸாவின் (அலை) அன்னை Mariam, Umm Eisa (Mary, the Mother of Jesus) என பெயரிடப்பட்டுள்ள இந்த பள்ளிவாசலின் உள்ளே சுமார் 250 பேர் தொழலாம் அதேபோல் வெளிவராந்தாவில் சுமார் 700 பேர் தொழலாம். வெளி வராந்தாவிற்கான நிழல் கூறை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதுடன் ரமலான் முதல் நாள் அன்று பள்ளி திறப்பையொட்டி வருகை தரும் சிறப்பு விருந்தினர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் நோன்பு திறக்க உணவு ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்.

அமீரகத்திற்கு சுமார் 15 வருடங்களுக்கு முன் வெறும் கையுடன் வந்து இன்று தனது கடின உழைப்பின் மூலம் சுமார் 68 மில்லியன் திர்ஹங்களுக்கு சொந்தக்காரராக திகழும் இந்த நல்லமனம் கொண்ட மனிதருக்கு நேர்வழி கிடைக்கவும், மென்மேலும் வளரவும் இப்புனித ரமலானில் அதிகமதிகம் பிரார்த்திப்போமாக!

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...