Pages

Friday, May 4, 2018

துபை தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளில் விளையாட்டு மைதானங்கள் அமைப்பு!

அதிரை நியூஸ்: மே 04
துபை தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளில் (Labour Camps) தொழிலாளர்கள் புத்துணர்வு பெறும் வகையில் தங்களின் சிறிதளவு ஓய்வு நேரத்தை விளையாட்டுக்களில் செலவிடும் வகையில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும், இந்த மைதானங்களை எதிர்வரும் ஜூன் மாத இறுதிக்குள் திறந்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் துபை அல் ரபா போலீஸ் ஸ்டேஷனின் (Al Rafa Police Station) இயக்குனர் பிரிகேடியர் அஹ்மது தானி பின் கலீத்தா அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

துபை முனிசிபாலிட்டியின் ஒத்துழைப்புடனும் துபை போலீஸின் முன்முயற்சியுடனும் அமைக்கப்பட்டு வரும் இம்மைதானங்களைப் போலவே இன்டெர்நேஷனல் சிட்டி, முஹைஸ்னா, அல் அவீர், அல் கோஸ் மற்றும் ஜெபல் அலி ஆகிய பகுதிகளிலுள்ள தொழிலாளர் முகாம்களுக்குள் சிறு, குறு கடைகளை அமைக்கும் பணிகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் மூலம் சட்டவிரோதமாக நடைபாதை வியாபாரிகள் பொருட்களை விற்கப்படுவது தடை செய்யப்படவுள்ளது. மேலும் சட்ட விரோத கடை நடத்துவோர், கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்போர், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் போன்றோரைப் பிடிக்கத் தேவையான சிசிடிவி கேமிராக்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...