Pages

Sunday, May 13, 2018

ஆக்ஸ்போர்டு மெட்ரிக். பள்ளி கல்விச்சேவையை பாராட்டி மாநில விருது ~ அமைச்சர் வழங்கினார்!

அதிரை நியூஸ்: மே 13
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேசன், சிபிஎஸ்இ பள்ளிகள் அசோசியேஷன் சார்பில், நடந்த விருது வழங்கும் விழாவில், அதிராம்பட்டினம்  அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர் ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் கல்விச் சேவையைப் பாராட்டி 217-2018 ஆம் ஆண்டு சிறந்த பள்ளிக்கான மாநில விருதை பெற்றது.

சென்னையில் மே 05 ந் தேதி நடந்த விழாவில், சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பி.பாலகிருஷ்ணன் ஆகியோர் விருதினை வழங்கி பாராட்டுத் தெரிவித்தனர். விருதினை ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி முதல்வர் என். உதயகுமார் பெற்றுக்கொண்டார். இதையடுத்து, பள்ளித் தாளாளர் மகாலட்சுமிபள்ளி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...